52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்குமா? ராஜ்யசபா எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு -பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த உறுதி

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 2026 காண சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது இதில் மயிலும் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த நிலையில் கடந்த மே மாதம் 7-ம் தேதி தன்னுடைய எம்.பி. பதவியை சி.வி. சண்முகம் ராஜினாமா செய்தார்.

மாநிலங்களவை எம்.பி. பதவி

இதனால் தமிழகத்திற்கான ஒரு இடம் காலியானது. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் 18ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மே 1-ம் தேதி வேப்பமனு தாக்கல் தொடங்கப்பட்டது.மே8-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் இந்த இடைத் தேர்தலுக்காக யின் ஆதரவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் வேட்பு மனு கடந்த மே 9-ம் தேதி மறுபரிசீலனை செய்யப்பட்டது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், குறைந்தபட்சம் 10 எம்.எல்.ஏக்களின் முன்மொழிவு ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டமட்டுமே தேவையான எம்.எல்.ஏக்களின் முன்மொழிவு கடிதங்களை சமர்ப்பித்திருந்தார். மற்ற 12 சுயேச்சை வேட்பாளர்கள் இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், அவர்களது வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.இதனால், பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்புமனு மட்டுமே செல்லுபடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நேற்று நிறைவடைந்த நிலையில், வேறு எந்த வேட்பாளரும் போட்டியில் இல்லாததால், காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இந்த நிலையில், தலைமை செயலகத்தில் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,தமிழ்நாடு மாநிலத்தின் குரலாகவும், தமிழ் மக்களின் குரலாகவும், தவெக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் குரலாக நான் இந்திய பாராளுமன்றத்தில் வில் குரல் எழுப்புவேன். அங்கு தமிழ்நாட்டின் செயல்பாடுகளையும் பிரச்சினைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் குரல் ஓங்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்கும்

இந்த நேரத்தில் மாநிலங்களவைக்கு செல்வது மிகவும் முக்கியமான பொறுப்பாக கருதுகிறேன்.தற்போது மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் சில முக்கிய மசோதாக்களை கொண்டு வர முயற்சித்து வருகிறது. குறிப்பாக மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டமும் மாநிலங்களின் அதிகாரங்களையும் உரிமைகளையும் பாதிக்கக்கூடும் என்ற கவலை உள்ளது.இத்தகைய விவகாரங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும். தமிழ்நாட்டின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் உறுதியாக குரல் கொடுப்பேன். டெல்லியிலும், நாடாளுமன்றத்திலும் தமிழக மக்களின் கருத்துகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்வைத்து பேசுவேன்.இந்த முக்கியமான பொறுப்பை எனக்கு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன்" என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *