52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
ஆட்சி அமைக்க யாருக்கெல்லாம் போன் பண்ணீங்கன்னு சொல்லவா?: நிர்மல் குமாருக்கு நயினார் எச்சரிக்கை

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பரபரக்கும் விவாதங்கள் நடந்து வந்தது. நேற்றைய தினம் எதிர்க்கட்சிகள் தவெக ஆட்சி அமைத்ததற்கு பின்பாக தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்து சராமரியாக கேள்வி எழுப்பினார்கள். இதனையடுத்து இன்று தனது உரையில் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார் முதல்வர் ஜோசப் விஜய். இந்நிலையில் தவெகவை சார்ந்த நிர்மல் குமார் பாஜக குறித்து தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.அதாவது, ஆளுநர் உரையின் போது இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். தேசிய கீதம் போன்று தமிழ்த்தாய் வாழ்த்தையும் இரண்டு முறை பாடி இருக்கலாமே? இந்த அரசுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை விடவும் ஆளுநர் முக்கியமா என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்து இருந்தார். அவருடைய இந்த விமர்சனங்கள் குறித்து பதிலளித்த தமிழக வெற்றி கழகத்தின் மோடி, அமித்ஷா குடும்பத்தை சார்ந்தவர்கள் கூட ஆளுநராகலாம் என பேசி இருந்தார். இந்நிலையில் அவருடைய இந்த பேச்சுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்துள்ளார். இது சம்பந்தமாக அவர் பேசுகையில், அமைச்சராக மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கும் தகுதி இல்லாத ஒரு நபர் நிர்மல் குமார். எங்கேயாவது மோடி, அமித்ஷா குடும்பத்தை சேர்ந்தவர்களை ஆளுநராக நியமிச்சு இருக்காங்களா? தவெகவை போன்று ஏனோ, தானமான கட்சி இல்லை பாஜக.தமிழக வெற்றி கழகம் மாதிரி சாதரணமான கட்சி கிடையாது. பாஜக இந்திய திருநாட்டை தொடர்ந்து ஆழ போகிறது. ஆனால் அடுத்த தேர்தலில் தவெக இருக்குமா? என்பது தெரியவில்லை என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் அதிகமாக பேசி பதிலுரை சொல்லி இருப்பது நம்ம முதல்வர் தான். எந்த கேள்விகளுக்கும் இதுவரை எழுந்து முதல்வர் பதில் சொல்லவில்லை. இப்படி கட்சியில் இருப்பவர் தான் நிர்மல் குமார். ஒருக்காலத்தில் பாஜகவில் இருந்தார். அதுக்கப்புறம் அதிமுகவில் இருந்தார். இப்போது தவெகவில் உள்ளார். அடுத்த தேர்தலில் எந்த கட்சிக்கு செல்வார் என்பது தெரியவில்லை. முதல்வராக பதவி ஏற்பதற்கு எத்தனை முறை கவர்னர் மாளிகைக்கு போனீங்க. ஏன் போனீங்க. சட்டம் படிச்சவர் தானே நிர்மல் குமார். இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். நாங்க தான் மெஜாரிட்டியா இருக்கும். எங்களை ஆட்சி அழைங்கன்னு எழுதி கொடுத்து இருக்காங்க.இதுதான் நிர்மல் குமார் படிச்ச சட்டம். முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பாக எங்களை பதவி ஏற்க விடுங்க என்று யாருக்கெல்லாம் போன் பண்ணீங்கன்னு நான் சொல்லவா. பட்டியலை வெளியிடவா? அப்போ மட்டும் பாஜக உங்களுக்கு இனித்ததா? இன்னைக்கு உறவினரை ஆளுநராக போடலாம் சொல்றீங்க. சட்டம் ஒழுங்க படிக்கலை, எழுத தெரியலை சொல்லி தானே கவர்னர் உங்களை அனுப்பி வைத்தார்.இப்படி கவர்னரிடம் ஒழுங்காக கடிதம் கூட கொடுக்க தெரியவில்லை என அடுக்கடுக்காக நிர்மல் குமார் பல விமர்சனங்களை நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ளார். முன்னதாக யார் தயவிலும் தவெக ஆட்சி நடக்கவில்லை என்று இன்றைய தினம் சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசி இருந்தார். இந்நிலையில் ஆட்சி அமைப்பதற்கு பலரிடம் போனில் பேசியதாக நயினார் நாகேந்திரன் வெளிப்படையாக தவெக மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *