52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தவெகவில் இணையும் அரசு குடும்ப வாரிசு? டெல்டா மாவட்டங்களை டார்கெட் செய்யும் விஜய் -மாஸ்டர் பிளான்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியலில் நொடிக்கு நொடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், அதிமுகவில் இருந்து கூண்டோடு தமிழக வெற்றிக்களை சேர்ந்து இணைந்து வருகின்றன.மேலும் ஒரு சிலர் பாஜக உள்ளிட்ட மாற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் முயற்சியில் காய் நகர்த்தி வருகின்றனர். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் கட்சியை கட்டமைக்கும் நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது.

திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டெல்டா மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அதிமுக, அமமுக மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகள் தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் தவெக ஈடுபட்டு வருவதாக எதிர் கட்சிகள் விமர்சனம் செய்திருக்கிறது. அந்த வகையில் திருச்சியின் அதிமுக முக்கிய புள்ளிகள்பக்கத்தில் சாய்ந்து விட்டது.இந்த நிலையில், அமமுகவில் அமைப்பு செயலாளராக உள்ள சாருபாலா தொண்டைமான் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதாவது :தமிழக அரசியலில் நீண்ட கால அனுபவம் உடையவர்களில் ஒருவராக அறியப்படும் புதுக்கோட்டை அரசு குடும்பத்தை சேர்ந்தவர் .இவர் திருச்சி மாநகராட்சியின் மேயராக கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு காலகட்டத்தில் பணியாற்றியுள்ளார்.

புதுக்கோட்டை அரச குடும்பத்தை சேர்ந்தவர் சாருபாலா

நிர்வாக திறன் மற்றும் மக்கள் தொடர்பால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கிய சாருபாலா தொண்டைமான் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளில் பணியாற்றுள்ளார். இந்த நிலையில் அவரது அரசியல் நகர்வு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்ட தலைவர்களை தங்களது கட்சியின் இணைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் ஆர்வம் காட்டி வரும் நிலையில், புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட மத்திய தமிழக பகுதிகளில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அனுபவம் மிக்க தலைவர்களை அணுகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதில் சாருபாலா தொண்டைமானும் ஒருவராக கூறப்படுகிறது.

விரைவில் வெளியாகுமா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதற்கிடையே, டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களில் தமிழக உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், சாருபாலா தொண்டைமான் தமிழக வெற்றி கழகத்தில் இனிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திருச்சி கிழக்கும் ஒன்று. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவரும் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.இந்த சூழலில், தவெக திருச்சி கிழக்கில் வெற்றி பெறும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதற்காக அரச குடும்ப வாரிசை இழுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *