சீ (Zee) குழுமத்தின் நிறுவனரும் பிரபல தொழிலதிபருமான சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் விவகாரத்தில், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு வாரியம் (NCLT) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது வணிக மற்றும் நிதி உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சுபாஷ் சந்திரா செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகையாக ₹22,006.57 கோடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடன் அளித்த நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு வெறும் ₹6.25 கோடியும், திவால் நடவடிக்கைகளுக்கான நிர்வாகச் செலவுகளுக்காக ₹25 லட்சமும் என மொத்தம் ₹6.50 கோடியை மட்டும் திருப்பிச் செலுத்துவதற்கான புதிய தீர்வுத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகைக்கு, வெறும் 0.03% தொகையை மட்டுமே திருப்பித் தருவது போன்ற இந்தத் திட்டம் கடன் வழங்கிய நிறுவனங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள NCLT, விரைவில் இறுதி உத்தரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.