சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு சாதகமான தீர்ப்பு – இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை விவகாரத்தில், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. 1960-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜம்மு காஷ்மீரில் கிஷன்கங்கா மற்றும் ரட்லே நீர்மின் திட்டங்களை இந்தியா அமைப்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த வழக்கை விசாரிக்க தமக்கு முழு அதிகாரம் உள்ளதாக நடுவர் நீதிமன்றம் தற்போதைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பையும் ஒருதரப்பான விசாரணையையும் இந்தியா தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து நிராகரித்து வருகிறது. உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் உருவான இந்த ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சர்வதேச நீதிமன்றத்தின் முடிவு இந்தியாவிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top