“சிகப்பு தோலும் ஆங்கில பேச்சும் சாதியை தீர்மானிக்காது!” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஒருவர் வெள்ளை நிறமாக இருக்கிறார், உயரமாக இருக்கிறார் அல்லது சரளமாக ஆங்கிலம் பேசுகிறார் என்பதற்காக மட்டுமே அவரது பட்டியல் சாதி (SC) சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஒருவரின் சாதிச் சான்றிதழ் போலியானது எனக் கூறி, சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவால் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒருவரது தோற்றத்தையோ அல்லது அவர் பேசும் மொழியையோ வைத்து அவரது சாதி அடையாளத்தைத் தீர்மானிக்க முடியாது என்று தெளிவுபடுத்தினர்.

சமூகத்தில் நிலவும் மரபுவழி எண்ணங்களின் அடிப்படையில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்றும், முறையான ஆவணங்கள் மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமே சாதிச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறி, ரத்து செய்யப்பட்ட உத்தரவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top