மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் லீக் சுற்று, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய மகளிர் அணி, தங்களது 4ஆவது லீக் போட்டியில், வங்கதேச மகளிர் அணியை எதிர்த்து விளையாடியது.இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.வங்கதேச மகளிர் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். ஓபனர், பெர்டோஸ் 31 பந்தில் 33 ரன்களையும், ஒன்டவுட் பேட்டர் கோபனா 26 பந்தில் 22 ரன்களையும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கேப்டன் நிகார் சுல்தானா 27 பந்தில் 32 ரன்களை அடித்தார். இப்படி, டாப் ஆர்டர் பேட்டர்கள் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், இவர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை.இறுதியில், வங்கதேச மகளிர் அணி, 20 ஓவர்களில் 136/8 ரன்களை எடுத்தது. இந்திய மகளிர் அணி பௌலர் ராதா யாதவ், 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஶ்ரீசரணி, 4 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.இந்திய மகளிர் அணி அபாரம்: 137 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், ஓபனர் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக செயல்படவில்லை. இவர், 6 பந்தில் 8 ரன்னை மட்டும் அடித்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு ஓபனர் சபாலி வர்மா, 34 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 53 ரன்களை சேர்த்தார்.இப்படி, சபாலி வர்மா தொடர்ச்சியாக அபாரமாக விளையாடியதால், இந்திய மகளிர் அணியின் ஸ்கோர் துவக்கத்திலேயே நல்ல வேகத்தில் உயர்ந்தது. பிறகு, யாஷிகா பாடியா 18 பந்தில் 23 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிகஸ் 15 பந்தில் 26 ரன்களை எடுத்தார். இப்படி, இந்திய பேட்டர்கள் அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டதால், இந்திய மகளிர் அணி, 16.5 ஓவர்களிலேயே 139/5 ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்றது.அரையிறுதிக்கு முன்னேற என்ன வழி: அடுத்து, இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதுதான், இந்திய மகளிர் அணிக்கு கடைசி லீக் போட்டியாகும். இப்போட்டி, வரும் ஞாயிறு இரவு 7:00 மணிக்கு துவங்கும். இப்போட்டியில், இந்திய மகளிர் அணி மெகா வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.காரணம், தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு, அடுத்து நெதர்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராகதான் போட்டிகள் இருக்கிறது. இந்த இரண்டிலும் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றுவிட்டால், 8 புள்ளிகளுடன் அதிக நெட் ரன்ரேட்டுடனும் இருப்பார்கள்.இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக வென்றால்தான், 8 புள்ளிகளை பெற முடியும். மேலும், மெகா வெற்றியைப் பெற்றால்தான், நெட் ரன்ரேட்டை உயர்த்தி வைத்துக் கொள்ள முடியும். இதனால், ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி எப்படி செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, அதிகரித்து காணப்படுகிறது.

