பாமக ராமதாஸ்- அன்புமணி சமாதானம்
இதனைத் தொடர்ந்து இருவரும் பொதுவெளியில் பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து அன்புமணி ஒரு தரப்பு அணியாகவும் ராமதாஸ் மற்றொரு தரப்பு அணியாகவும் பாமக இரண்டாக பிரிந்தது. இதனைத் தொடர்ந்து பாமக கட்சித் தலைவர் பதவியில் இருந்துயை நீக்கினார். மேலும் அன்புமணிக்கு ஆதரவாக இருந்த மாவட்டம் ஒன்றியம் நகரம் பகுதி செயலர்களை ராமதாஸ் நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
பாமக நிர்வாகிகள் மாற்றம்
பாமக பொது செயலாளராக முரளி சங்கர், இணைச் பொது செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அருள், பொருளாளராக சையத் மன்சூர் ஆகியோரை ராமதாஸ் நியமித்து உத்தரவிட்டார். மேலும் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை பாமக செயல் தலைவராகவும் அவரது மகன் சுகந்தனை மாநில செயற்குழு உறுப்பினராகவும், ராமதாஸ் நியமித்தது பாமகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தரப்பு பாமக யாருடன் கூட்டணி வைப்பதில் சிக்கி தவித்தது. ராமதாஸ் திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடங்கிய புதிய கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. மேலும் 234 தொகுதிகளிலும் குறிப்பாக அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட தொகுதிகளில் அவருக்கு எதிராக வேட்பாளர்களை ராமதாஸ் நியமித்து உத்தரவிட்டார். இருப்பினும் அன்புமணி தரப்பு பாமக வேட்பாளர்கள் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டப்பேரவையில் நுழைந்தனர்.
முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்த ராமதாஸ்
இந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக ராமதாஸின் 61வது திருமண நாளான நேற்று முன்தினம் அவரை அன்புமணி மற்றும் அவரது மனைவி குழந்தைகள் என குடும்பமாக தைலாபுரத்திற்கு சென்று சந்தித்தனர். அப்போது மகனை பார்த்ததும் ராமதாஸ் கண்ணீர் வடித்து சுமார் மூன்று நிமிடங்களாக கட்டி அணைத்து கொண்டார். இது குடும்பத்தார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது பாமக மட்டுமல்லாது வன்னியர் சங்கம் உள்ளிட்ட 34 அமைப்புகளையும் கவனித்துக் கொள்ளுமாறு அன்புமணி இடம் ராமதாஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்ளைது பாமக வட்டாரத்தில் கேட்டபோது இனி பாமக என்பது அன்புமணி தான் கட்சி மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கட்டமைத்து வருகிறார். எனவே பழைய கசப்புகளை மனதில் வைத்து எதையும் செயல்பட மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் மக்களிடம் செல்வாக்கு உள்ள திறன் மிக்கவர்கள் இடையே மாவட்டம் ஒன்றியம் பகுதி செயலாளர்களை அவர் நியமிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ராமதாசால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சிக்கு வலிமை சேர்ப்பவர்களாக இருந்தால் அன்புமணி நீக்க மாட்டார். ஆனால் ராமதாசன் மகள் ஸ்ரீகாந்தி அவரது மகன் சுகந்தன் கௌரவ தலைவர் ஜிகே மணி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதை அன்புமணி விரும்ப மாட்டார் என்றும் பாமக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

