52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
கோவை ஆவின் நுகர்வோருக்கு ஏமாற்றம்: மாதாந்திர அட்டைக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

கோவை மாவட்ட ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி சலுகை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து பால் முகவர்களுக்கான கமிஷன் மற்றும் விநியோக முறைகளிலும் புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஆவின் நிர்வாகத்தில் புதிய நடைமுறை

இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் முழுமையாக அமலுக்கு வருகின்றன.அட்டைதாரர்களுக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆவின் மாதாந்திர பால் அட்டை வைத்துள்ள நுகர்வோருக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சலுகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கார்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லிட்டருக்கு 2 ரூபாய் தள்ளுபடி இனி கிடையாது. இந்த சலுகை ரத்து செய்யப்படுவதால், நுகர்வோர்கள் இனி வழக்கமான விலையிலேயே பால் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

முகவர்களுக்கான புதிய கமிஷன் மற்றும் விநியோக முறைகள்

நுகர்வோருக்கான சலுகை ரத்து மட்டுமின்றி, பால் முகவர்களை ஒழுங்குபடுத்தும் வகையிலும் சில முக்கிய முடிவுகளை ஆவின் நிர்வாகம் எடுத்துள்ளது. வரும் 1-ஆம் தேதி முதல் பால் முகவர்கள் தங்களுக்கான மாதாந்திர கமிஷன் தொகையை முன்கூட்டியே கழித்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை மட்டும் நிர்வாகத்திடம் செலுத்தும் புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட உள்ளது.முகவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பால் விநியோகம் இனி பாக்கெட் கணக்கில் இருக்காது. அதற்குப் பதிலாக, விநியோக முறையை எளிமையாக்க இனி பெட்டி அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்பட்டு பால்கள் பிரித்து வழங்கப்படும் என நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.ஆவின் பால் விநியோகத்தை முறைப்படுத்தவும், முகவர்களின் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் இந்த புதிய அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *