52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IND vs IRE T20 – ஷ்ரேயஸ் ஐயரை கலாய்த்த, அயர்லாந்து கேப்டன்: கடைசில ஜெயிச்சும் காட்டிட்டாரு

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால், இரண்டாவது போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, 2ஆவது போட்டியில் பெரிய வெற்றியைப் பெற்று, அதிரடியாக பதிலடியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது.டாஸ் நிகழ்வு: இந்நிலையில், 2ஆவது போட்டிக்கான டாஸ் போடும் நிகழ்வு நடைபெற்றபோது, இந்திய அணிதான் டாஸ் வென்றது. டாஸ் வென்றதும் பேசிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘‘ஈரப்பதம் நிறைந்த காலநிலையாக இருப்பதால், முதலில் பந்துவீச விரும்புகிறோம். காலநிலையை கருத்தில் கொண்டுதான் முதலில் பந்துவீச விரும்புகிறோம். நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’’ எனக் கூறினார்.அடுத்து பேசிய அயர்லாந்து அணிக் கேப்டன் லோர்கான் டெக்கர், ‘‘முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சிதான். நாங்கள், மிக விரைவாக, பிட்சை கணித்துவிட்டோம். மிகச்சரியாக பிட்சை கணித்துவிட்டோம் என்றேதான் கருதுகிறேன். கடந்த போட்டியில் வென்றது எங்களுக்கு, புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. மீண்டும் சொல்கிறேன், முதலில் பேட்டிங் ஆடுவது மகிழ்ச்சிதான்’’ எனத் தெரிவித்தார்.இதனால், முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்றது நல்ல விஷயம்தான் என அயர்லாந்து கேப்டன் கூறியதால், அயர்லாந்து அணி 180 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அயர்லாந்து அணி, வெறும் 154 ரன்களை மட்டும் அடித்து சொதப்பியது. இதனால், அயர்லாந்து கேப்டன் பேசியது, உடனே ட்ரோல் ஆனது.ஆனால், அதன்பிறகு 155 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக, அயர்லாந்து பௌலர்கள் தொடர்ச்சியாக மிரட்டலாக பந்துவீசினார்கள். குறிப்பாக, ஓபனர்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகிய இருவரையும், கோல்டன் டக் ஆக்கி மாஸ் காட்டினார்கள்.பிறகு, இஷான் கிஷன் 12 (11), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 (7) போன்றவர்களை அடுத்தடுத்து வீழ்த்திய நிலையில், திலக் வர்மாவை 46 பந்துகளை எதிர்கொண்டபோதும், அவரை சைலண்டாக வைத்திருந்தனர். திலக் வர்மாவால் 46 பந்தில் 55 ரன்களைதான் அடிக்க முடிந்தது.பிறகு, அக்சர் படேல் 14 (18), ஷிவம் துபே 20 (16) போன்றவர்களும் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், ஹர்ஷித் ராணா 10 பந்தில் 21 ரன்களை அடித்து, ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். இறுதியில், கடைசி 2 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ராணா அவுட் ஆக, கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி பந்தில், பிரின்ஸ் யாதவ் ஒரு சிக்ஸர் அடித்தார். இறுதியில், இந்திய அணி, 20 ஓவர்களில் 153/9 ரன்களை மட்டும் அடித்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.இந்நிலையில், பிட்சை சரியாக கணிக்காமல், டாஸை சரியாக பயன்படுத்தாமல், ஷ்ரேயஸ் ஐயர் சொதப்பியதையும், அயர்லாந்து கேப்டன் டாஸ் போடும் நிகழ்வின்போது பேசியதும், தற்போது வைரலாகி வருகிறது. ஷ்ரேயஸ் ஐயர், பிட்சை சரியாக கணிக்காமல் இருந்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஷ்ரேயஸ் ஐயருக்கு கேப்டன்ஸிக்கான திறமை சிறப்பாக இல்லை என ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *