52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IPL 2027 – முடிந்தது ஹர்திக் பாண்டியா டிரேடிங்: எந்த அணிக்கு செல்ல உள்ளார்? புது அப்டேட் இதோ

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறுவதில், ஹர்திக் பாண்டியா உறுதியாக இருக்கிறார். குறிப்பாக, ஐபிஎல் 2026 சீசனின் முதல் பாதி ஆட்டங்களில், மும்பை இந்தியன்ஸ் சொதப்பியதால், ஹர்திக்கை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தனர்.இதனால், இரண்டாவது பாதியில் ஹர்திக் ஆட மறுத்த நிலையில், பிறகு அணி நிர்வாகம் ஹர்திக்கிடம் சமரசம் பேசி, கேப்டனாகவே விளையாட வைத்தனர். இந்நிலையில், ஐபிஎல் 2027 சீசனுக்கு புதுக் கேப்டனை நியமிக்க முடிவு மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்திருப்பதால், அணியைவிட்டு வெளியேற ஹர்திக் முடிவெடுத்துவிட்டார். இவரை, டிரேடிங்கில் அனுப்ப நிர்வாகம் விரும்புகிறது.குறிப்பாக, சிஎஸ்கேவுக்கு செல்ல ஹர்திக் பாண்டியா விருப்பம் தெரிவித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஆயுஷ் மாத்ரேவை கேட்டது. ஆனால், சிஎஸ்கே இந்த டீலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஷிவம் துபேவை மட்டுமே விட்டுக்கொடுக்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால், அந்த டீலை தொடரவில்லை.பிறகு, கேகேஆர் அணி, மும்பை இந்தியன்ஸை தொடர்புகொண்டு ஹர்திக் பாண்டியாவை கேட்டது. ஹர்திக் கிடைத்தால், அணியின் கேப்டன்ஸி பிரச்சினை தீர்ந்துவிடும் என மும்பை இந்தியன்ஸிடம் கூறினார்கள். ஆனால், மும்பை இந்தியன்ஸ், பதிலுக்கு ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தியை கேட்டதால், கேகேஆர் அணி பின்வாங்கியது.அடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா வேண்டும் எனக் கேட்க, மாற்றாக ஷ்ரேயஸ் ஐயரை விட்டுக்கொடுங்கள் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேட்க, பஞ்சாப் கிங்ஸும் ஒதுங்கிக் கொண்டது.பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை தொடர்புகொண்டு, ஹர்திக்கை கேட்ட நிலையில், மாற்றாக யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை மும்பை இந்தியன்ஸ் கேட்டது. இதற்கு, ராஜஸ்தான் ராயல்ஸும் சம்மதம் தெரிவித்த நிலையில், என்னால் ராஜஸ்தானுக்கு செல்ல முடியாது என ஹர்திக் மறுப்பு தெரிவித்ததால், அந்த டீலும் தள்ளிப் போனது.பிறகு, கேகேஆர் அணி சற்று இறங்கி வந்தது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ரமன்தீப் சிங், அங்கிரிஸ் ரகுவன்ஷி ஆகியோரை விட்டுக்கொடுக்க கேகேஆர் அணி நிர்வாகம் முன் வந்துள்ளது. மேலும், கூடுதலாக 10 கோடியும் தர கேகேஆர் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த டீலுக்கு மும்பை இந்தியன்ஸ், கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.மேலும், அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக கலீல் அகமது, ஷிவம் துபே ஆகியோரை விட்டுக்கொடுக்க முன் வந்துள்ளது. மேலும், 2 கோடி ரூபாயை கூடுதலாக கொடுக்கவும் முன் வந்துள்ளது. இந்த டீலுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது.இப்படி, இரண்டு டீல்களை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், இறுதி செய்து வைத்துள்ளது. இறுதி முடிவை ஹர்திக் பாண்டியாதான் எடுக்க உள்ளார். இந்த இரண்டு அணிகளில் எந்த அணியை ஹர்திக் பாண்டியா தேர்வு செய்கிறாரோ, அந்த டிரேடிங் டீலை ஏற்றுக்கொள்ள மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.கேகேஆர் அணிக்கு சென்றால், கேப்டன் பதவி கிடைக்கும். கடைசிவரை கேப்டனாக ஆட முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், கேப்டன் பதவியை தர முன்வரவில்லை. இதனால், ஹர்திக் பாண்டியா, கேகேஆர் அணியை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *