52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
CM விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: பள்ளிகளில் கொண்டாட தடை கோரி மனு -உயர்நீதிமன்றம் விரைவில் விசாரணை

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பெற்றுள்ள நிலையில், அண்மையில் அவரது பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி அரசுப் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி வளாகங்களில் தவெக நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடியதும், மாணவர்களை வைத்து சமூக வலைத்தளங்களுக்காக (Reels) நடனமாடச் செய்ததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி

சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் சௌதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக நிர்வாகி ஒருவர் நடத்திய நிகழ்ச்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. சௌதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் துணைச் செயலாளரான "தளபதி" சூர்யா என்பவர்,யின் பிறந்தநாளை முன்னிட்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக மாணவர்கள் கடும் வெயிலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போதிய இருக்கை வசதி இல்லாததால் பல மாணவர்கள் தரையில் அமர வைக்கப்பட்டதாக கூற்பப்படுகிறது.மேலும் நிகழ்ச்சிக்கான நாற்காலிகள், பெஞ்சுகள், மைக்ரோஃபோன் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களே சுமந்து ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி திட்டமிட்ட நேரத்தை விட சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியதாக கூறப்படுகிறது.

பள்ளிகளில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட நிர்வாகிகள்

இதற்கிடையில், விழாவை ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கப்பட்டதால் நிகழ்ச்சி மேலும் தாமதமானதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்த விவகாரத்தை தொடர்ந்து தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, பள்ளி வளாகங்களில் ரீல்ஸ் எடுக்கக் கூடாது என்றுசமீபத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த சில நாட்களிலேயே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும் வழக்கறிஞருமான கவிகணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நிகழ்ச்சிகளின் போது பள்ளி மாணவர்களை தமிழக வெற்றி கழக தலைவருக்கு பிறந்தநாள் பாடல் பாடவும் கோஷம் எழுப்பவும் செய்துள்ளனர் மாணவர்களை வெயிலில் அமர செய்துள்ளனர்.

விசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு விரோதமானது. இதனால் பள்ளி கல்லூரிகளில் தமிழக வெற்றிக்கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்களின் தலைமை பதவி வகிப்பவர்கள் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன உத்தரவு பிறப்பிக்கிறது என்பது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *