நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக புதிய ட்டத்தைக் கொண்டுவர முடியும்
இதுதொடர்பாக சமூக வலைதளமான X-ல் பதிவிட்ட அமெரிக்காவுக்கு இது நல்ல தீர்ப்பு அல்ல. இருப்பினும், அரசியலமைப்பை திருத்த வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸில் புதிய சட்டம் கொண்டு வந்து இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வரலாம். அதற்கு எனது முழு ஆதரவும் இருக்கும். காங்கிரஸ் இன்றே இதற்கான நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற போது கையெழுத்திட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவை செல்லாது எனத் தீர்ப்பளித்தது.உச்சநீதிமன்றம் 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பின் மூலம், அமெரிக்க மண்ணில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் குடியுரிமை பெறும் உரிமையை உறுதிப்படுத்தியது. இதற்கு முன்பும் கீழமை நீதிமன்றங்கள் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்திருந்தன.
தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தீர்ப்பில் கூறியதாவது:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிகமாக வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளும் அமெரிக்க சட்டத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறார்கள். எனவே, அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்தின்படி அவர்கள் பிறப்பிலேயே அமெரிக்க குடிமக்களாக கருதப்படுவார்கள்" என்று குறிப்பிட்டார்.மேலும் குடியுரிமை என்பது ஒருவரின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் முக்கியமான உரிமை. 14-வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த உரிமை இந்த நாட்டில் பிறக்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியை நாங்கள் இன்றும் காக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.இந்த தீர்ப்பின் மூலம் பிறப்புரிமை குடியுரிமை நடைமுறையை மாற்ற வேண்டுமெனில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்பது தெளிவாகியுள்ளது.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை
இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாக குடியுரிமை பெறும் நோக்கில் மேற்கொள்ளப்படும் "Birth Tourism" போன்ற செயல்களை தடுக்க நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.மேலும், சட்டத்தில் உள்ள இடைவெளிகளை பயன்படுத்தி குழந்தைகளுக்கு தானாக குடியுரிமை பெற முயற்சிப்பவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, தனது இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே டிரம்ப் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் அவரது நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இது கருதப்பட்ட நிலையில், தற்போது அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவில் வசிக்க கூடிய இந்தியர்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டுள்ளனர். தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திட்டங்கள் கொண்டு வருவது இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

