அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா, முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகல் என அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிகழ்வுகள் அதிமுகவை பலவீனமடைய செய்பவையாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக இபிஎஸ்ஸுக்கு எதிராக செயல்பட்ட எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது. எடுத்த இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை கிளப்பியது. இதனை தொடர்ந்து அதிருப்தியில் இருந்த அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினார்கள். இதனால் அவர்களின் கட்சி பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்காதது பரபரப்பினை கிளப்பியது. இப்படியான நிலையில் சமீபத்தில் எஸ்.பி. வேலுமணிக்கு உள்ளிட்டோருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் திருப்பி அளித்த பதவியை எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பெறுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். பொறுப்பு பறிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.இந்நிலையில் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பரபரப்பு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர். அதில், 2026 சட்டமன்ற தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக, பல இடங்களில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இது மிகுந்த மனவேதனையையும், சோர்வையும் தந்ததை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அறிவார்கள். சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்பாக அதிமுகவை வலுப்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் இருந்தனர்.இதன் காரணமாக நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர்களின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பாக உங்களை பொதுசெயலாளராக அமர வைக்கவும், முதல்வராக்கவும், கழகத்தின் மீது தொடரப்பட்ட வழக்கினை எதிர்கொள்ளவும் முன்நின்ற சி.வி. சண்முகத்துக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்தது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.தேர்தலுக்கு முன்/பின் செயல்பாடுகள் காரணமாக அதிருப்தியில் இருந்தவர்களுடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோரை அனுப்பி பேசினீர்கள். தொடர்ந்து 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்க கடிதத்தை திரும்ப பெற்றுக்கொண்டீர்கள். அப்போது ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின் அடிப்படையில் கழக பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் பதவி வழங்கப்படும் என உறுதி அளித்து இருந்தீர்கள்.ஆனால் தற்போது நீங்கள் அறிவித்துள்ள கழக பொறுப்பாளர்கள் பட்டியலில் தாங்கள் உறுதி அளித்ததை போன்று மீண்டும் அவர்கள் வகித்து வந்த பதவிகள் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த ஐம்பது நாட்களாக சாரை சாரையாக தவெகவில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து கொண்டிருக்கின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக எனும் ஆலம் விருட்சமரம் உங்களின் தவறான முடிவுகளால் தொடர் தோல்வியை கண்டு வருகிறது.அதனை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்ற குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அதோடு வழங்கிய பொறுப்புகளை ஏற்க மாட்டோம் என தெரிவித்துள்ளதுடன், பதவிகள் எதுவும் வேண்டாம். கழக உறுப்பினர்களாக செயல்படுவோம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். எஸ்.பி. வேலுமணி , தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேர் இபிஎஸ்ஸுக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

