52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
CSK, DC Trading – டி நடராஜனை கொடுக்க தயார்: மாற்றா இந்த வீரர் வேணும்: சிஎஸ்கேவிடம் கேட்ட டெல்லி கேபிடல்ஸ்

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங் பேச்சு வார்த்தையில், அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஷிவம் துபே, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் போன்ற முக்கிய பெயர்கள் டிரேடிங் பேச்சு வார்த்தையில் அடிபடுவதால், முன்பு எப்போதும் இல்லாத வகையில், தற்போது ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங் பேச்சு வார்த்தை தீவிரமாகி உள்ளது.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்புகொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், டி நடராஜனை டிரேடிங்கில் விட்டுக்கொடுக்க தயார் எனத் தெரிவித்து, பேச்சு வார்த்தையை துவங்கியிருக்கிறது.மாற்றாக யாரை கேட்கிறார்கள்: டி நடராஜனுக்கு பதில், ஆயுஷ் மாத்ரே வேண்டும் என டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. உடனே, இந்த டிரேடிங் பேச்சு வார்த்தை சரிபட்டு வராது, எக்காரணம் கொண்டும் ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க மாட்டோம் என சிஎஸ்கே நிர்வாகம், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.இந்நிலையில், ஆயுஷ் மாத்ரேவை கொடுக்கவில்லை என்றால், உர்வில் படேலையாவது விட்டுக்கொடுங்கள் என டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஆனால், டி நடராஜனுக்கு 35 வயதாகிவிட்டது, இனி அவர் எங்களுக்கு தேவைப்பட மாட்டார். டி நடராஜனை, 10 கோடி கொடுத்து டிரேடிங்கில் வாங்க தயார். இதற்கு மேல், எங்களிடம் எதை எதிர்பார்த்தாலும் கிடைக்காது என டெல்லி கேபிடல்ஸிடம் சிஎஸ்கே நிர்வாகம் கறாராக தெரிவித்துள்ளதாம்.ஏற்கனவே பேச்சு வார்த்தை நடக்கிறது: சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகத்திற்கு இடையில், ஏற்கனவே மற்றொரு டிரேடிங் பேச்சு வார்த்தை நடக்கிறது. டிவோல்ட் பிரேவிஸை கொடுத்துவிட்டு, மாற்றாக இந்திய பினிஷர் அசுதோஷ் சர்மாவை பெற சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு இரு அணிகளும், கிரின் சிக்னல் கொடுத்திருப்பதால், தற்போது பேச்சு வார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.டிவோல்ட் பிரேவிஸ் டெல்லி கேபிடல்ஸுக்கு சென்றால், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் பிரேவிஸ் இருவரும் மிடில் வரிசையை பலப்படுத்த முடியும். இதனால்தான், டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம், பிரேவிஸை பெற்று, அசுதோஷ் சர்மாவை பெற முனைப்பு காட்டி வருகிறது.இந்நிலையில், தற்போது டி நடராஜனை கொடுத்துவிட்டு, மாற்றாக ஆயுஷ் மாத்ரேவை கேட்ட நிலையில், இதற்கு சிஎஸ்கே நிர்வாகம், முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம், ஆயுஷ் மாத்ரேவை கேட்டு மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் போன்ற அணிகள் வந்தபோது, சிஎஸ்கே நிர்வாகம் விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது. குறிப்பாக, ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்றாக ஹர்திக் பாண்டியாவை தர தயார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்தபோதும், அதனை சிஎஸ்கே ஏற்கவில்லை.இருப்பினும், ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கேவுக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதால், சிஎஸ்கேவுடன் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.சிஎஸ்கேவைப் பொறுத்தவரை, எக்காரணம் கொண்டும் இளம் வீரர்களை டிரேடிங்கில் விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், ஆயுஷ் மாத்ரே ஆகிய டாப் ஆர்டர் பேட்டர்களை, நீண்ட காலத்திற்கு ஆட வைக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *