52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
கன்னியாகுமரி IREL அணுக்கனிம சுரங்க திட்டம்:நில ஒதுக்கீட்டை நீட்டித்த தமிழக அரசு – மத்திய அரசுக்கு க்ரீன் சிகனல்

தமிழக அரசின் இயற்கை வளங்கள் (சுரங்கம் மற்றும் கனிமங்கள்) துறை, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவில் உள்ள 1,144.06.18 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலத்தை IREL (India) Limited நிறுவனத்திற்கு அணுக்கனிமங்கள் சுரங்கப் பணிகளுக்காக ஒதுக்கியிருந்தது. அந்த ஒதுக்கீட்டின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கத் திட்டம்

இந்த உத்தரவு தமிழக அரசின் இயற்கை வளங்கள் துறையின் சார்பில் அரசாணை எண் வெளியிடப்பட்டுள்ளது.அதில் மத்திய அணுசக்தித் துறை 2015-ஆம் ஆண்டு தமிழக அரசிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,817 ஹெக்டேர் நிலத்தை IREL நிறுவனத்திற்கு ஒதுக்க அனுமதி கோரியது.குறிப்பாக கடற்கரை மணலில் காணப்படும் மோனசைட் (Monazite) மற்றும் சிர்கான் (Zircon) போன்ற முக்கிய மற்றும் முக்கிய தொழில்துறை உள்ளிட்ட தேவைகளுக்கு முக்கியமானவை என்பதால் இந்த கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து, 2021 ஜூன் 11-ஆம் தேதி மத்திய சுரங்க அமைச்சகம், 1,144.06.18 ஹெக்டேர் பரப்பளவைகளுக்காக IREL நிறுவனத்திற்கு ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது.அதன் பின்னர், 2021 ஜூன் 25-ஆம் தேதி IREL நிறுவனம், சுரங்க குத்தகைக்கு விண்ணப்பித்தது.

திட்டத்துக்காக எந்தெந்த பகுதிகள்?

இந்த அணுக்கனிம சுரங்கத் திட்டத்துக்காக கீழ்மிடாலம் ,மிடாலம் , எனையம்புத்தந்துறை, எழுதேசம் A, எழுதேசம்-B, எழுதேசம்-C, கொல்லங்கோடு-A மற்றும் கொல்லங்கோடு-B உள்ளிட்ட எட்டு கிராமங்களில் உள்ள கிராம பகுதிகளை உள்ளடக்கியது தான் 1,144.06.18 ஹெக்டேர் நிலப்பரப்பு ஆகும். மேலும் சுரங்கம் பணிகள் அமைப்பதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி அவசியம் என்பதால், இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பிறகு தேசிய பாதுகாப்பு தொடர்பான சில முக்கிய திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நடைமுறையில் இருந்துச் சற்று விலக்குகள் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, 2025 ஜூலை 22-ஆம் தேதி மீண்டும் அணுக்கனிம சுரங்கத் திட்டத்துக்காக கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதி பெற விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பம் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது.இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.

தமிழக அரசு நில ஒதுக்கீடு நீட்டிப்பு

அணுக்கனிம சுரங்கத் திட்டத்துக்காக சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் CRZ ஒப்புதல் இதுவரை கிடைக்காததால், 2021 ஜூன் 11-ஆம் தேதி வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் காலம் 2026 ஜூன் 10-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இதையடுத்து திட்டம் பாதிக்கப்படாமல் தொடரும் வகையில், நில ஒதுக்கீட்டின் செல்லுபடிக் காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஐரெல் நிறுவனம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது.இந்த திட்டம் நாட்டின் முக்கிய அணுக்கனிம வளங்கள் தொடர்பானது என்பதையும், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் அளித்த பரிந்துரையையும் கருத்தில் கொண்டு, தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்றுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,144.06.18 ஹெக்டேர் பரப்பளவில் ஐரெல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் செல்லுபடிக் காலம் 2027 ஜூன் 10-ஆம் தேதி வரை, மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *