52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IPL 2027 – டிரேடிங்கில் இந்த வீரர் கிடைத்தால், ரோஹித் சர்மாவை பதிலுக்கு விட்டுக்கொடுக்க தயார்: MI நிர்வாகம் முடிவு

இனி கேப்டன் பதவி கிடைக்காது எனத் தெரிந்ததும், ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியைவிட்டு, டிரேடிங்கில் வெளியேற முடிவு செய்துள்ளார்.ஹர்திக் பாண்டியாவை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி இருக்கிறது. இந்த டீலிங், கிட்டதட்ட உறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், அடுத்த டிரேடிங் டீல் குறித்து பேச ஆரம்பித்துள்ளது.: இந்நிலையில், தற்போது 39 வயதாகும் ரோஹித் சர்மாவை டிரேடிங்கில் அனுப்ப, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக தரமான இந்திய இளம் ஓபனரை வாங்க முடிவு செய்துள்ளனர்.அதுவும், தரமான இந்திய இளம் ஓபனர் கிடைத்தால் மட்டுமே, ரோஹித் சர்மாவை டிரேடிங்கில் அனுப்ப மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.ராஜஸ்தானுடன் பேச்சு வார்த்தை: யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை விட்டுக்கொடுத்து, ஹர்திக் பாண்டியாவை வாங்கதான், ராஜஸ்தான் ராயல்ஸ் விரும்பியது. ஆனால், ராஜஸ்தான் அணிக்கு செல்ல முடியாது என ஹர்திக் பாண்டியா தெரிவித்துவிட்டதால், வேறு வழியில்லாமல், இந்த டீலை அப்போது, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், நிராகரித்துவிட்டது.இந்நிலையில், தற்போது மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தை, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அணுகியுள்ளது. ரோஹித் சர்மாவை கொடுத்துவிட்டு, மாற்றாக யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை வாங்க திட்டமிட்டுள்ளனர்.ஆனால், ரோஹித் சர்மாவுக்கு 39 வயதாவதால், ரோஹித் சர்மாவையும், கூடுதலாக ஒரு தரமான வீரரையும் அனுப்பினால், ஜெய்ஷ்வாலை விட்டுக்கொடுக்க தயார் என ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தெரிவித்துவிட்டதாம். குறிப்பாக, நமன் தீரையும், ரோஹித் சர்மாவையும் கொடுக்க முன் வந்தால், உடனே யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை அனுப்புகிறோம் என ராஜஸ்தா் ராயல்ஸ் அணி நிர்வாகம் உறுதியாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ரோஹித் சர்மாவுக்கு பிறகு, ஒரு தரமான இந்திய இளம் ஓபனர் தேவை. மேலும், நமன் தீரை விட்டுக்கொடுப்பது ஒன்றும், மும்பை இந்தியன்ஸுக்கு பெரிய பாதப்பு ஏற்படவும் வாய்ப்பில்லை. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இந்த டீலிங்கிற்கு, கிரீன் சிக்னலை காட்டவே அதிக வாய்ப்புள்ளது.நமன் தீர் ஆட்டம்: ஐபிஎல் 2026 சீசனில், 14 போட்டிகளில் விளையாடிய நமன் தீர், அதில் 147.22 ஸ்ட்ரைக் ரேட், 26.50 சராசரியில், 318 ரன்களை அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களை சேர்த்த அவர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 29 பந்தில் 50 ரன்களை குவித்து அசத்தினார்.நமன் தீரும் நல்ல பார்மில்தான் இருக்கிறார். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம், மகிழ்ச்சியுடன் ஜெய்ஷ்வாலை அனுப்பிவிட்டு, மாற்றாக ரோஹித் சர்மா, நமன் தீர் ஆகியோரை பெறவே வாய்ப்புள்ளது.ஒரேயொரு சிக்கல்: மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ரோஹித்தை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த டீலுக்கு இன்னமும் ரோஹித் சர்மா ஒப்புதல் தரவில்லை. ரோஹித் சர்மாவின் இறுதி முடிவை பொறுத்துதான், இவரை வெளியேற்றுவது குறித்து, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்யும்.இருப்பினும், ஐபிஎல் 2027 சீசனின்போது, முற்றிலும் இளம் பேட்டர்க்களை மட்டுமே டாப் ஆர்டரில் விளையாட வைக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *