52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IND vs ENG 1st T20 – 189 அடித்த இந்தியா: மழையால், இங்கிலாந்துக்கு 5 ஓவரில் டார்கெட் எவ்வளவு தெரியுமா?

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.இந்திய இன்னிங்ஸ்: முதமலில் களமிறங்கிய இந்திய அணியில், அபிஷேக் சர்மா மற்றும் கப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.ஓபனர் சஞ்சு சாம்சன், 7 பந்துகளில் ஒரு ரன்னை அடித்த நிலையில், இஷான் கிஷன் 2 பந்துகளில் ரன்களை அதுவும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து, அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து, 38 பந்துகளில் 82 ரன்களை குவித்தார்கள்.அபிஷேக் சர்மா, 24 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 59 ரன்களை குவித்த நிலையில், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 47 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 68 ரன்களை சேர்த்தார். இப்படி, இருவரும் அதிரடியாக விளையாடியப் பிறகு, வழக்கம்போல திலக் வர்மா நிதானமாக ஆட ஆரம்பித்தார். இவர், 13 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்களை மட்டுமே அடித்தார்.இதனைத் தொடர்ந்து, இறுதிக் கட்டத்தில், ஷிவம் துபே மிரட்டலாக விளையாடி, 21 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 42 ரன்களை குவித்தார். இப்படி, ஷிவம் துபே கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதால், இந்திய அணி, 20 ஓவர்களில் 189/7 ரன்களை குவித்தது.இங்கிலாந்து அணி சார்பில், வேகப்பந்து வீச்சாளர் சகிப் முகமது 4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். சாம் கரண் 3 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.மழை பெய்தது: இந்திய இன்னிங்ஸ் முடிந்ததுமே, மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை நிற்கவே இல்லை. இதனால், ஓவர்கள் குறைக்கப்பட்டு கொண்டே இருந்தது. டிஎல்எஸ் முறைப்படி, 19 ஓவர்களில் 183 ரன்கள், 18 ஓவர்களில் 176 ரன்கள், 17 ஓவர்களில் 169 ரன்கள், 16 ஓவர்களில் 162 ரன்கள், 15 ஓவர்களில் 154 ரன்கள் இலக்கு என டிஎல்எஸ் விதிமுறை தெரிவித்தது.இறுதியாக, 5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 64 ரன்கள் அடித்தால் வெற்றி என டிஎல்எஸ் ஸ்கோர் தெரிவித்தது. ஆனால், மழை தொடர்ச்சியாக பெய்து கொண்ட இருந்த காரணத்தினால், இங்கிலாந்து அணியால், ஒரு பந்தை கூட எதிர்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால், இந்திய நேரப்படி நள்ளிரவு 12:45 மணிக்கு, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, வரும் ஜூலை 4ஆம் தேதி, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் சொதப்பியிருப்பதால், வைபவ் சூர்யவன்ஷிக்கு 2ஆவது போட்டியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா மீண்டும், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதால், அவரை நீக்க அதிக வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *