அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஒரு வெற்றியைக் கூட பெறாமல் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு, அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது போட்டி முடிந்த உடனே, நள்ளிரவில் இணைய வழியில் பிசிசிஐ மீட்டிங்கை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, தோல்விக்கான காரணம் குறித்து, காரசார வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது.அப்போது பேசிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ‘‘மூன்று பார்மெட்டிற்கும் ஒரே கேப்டன் இருந்தால்தான், வீரர்களுக்கு குழப்பம் ஏற்படாது. இதனால், மூன்று பார்மெட்டிற்கும் ஒரே கேப்டனாக ஷுப்மன் கில்லை நியமிக்க வேண்டும்’’ என கம்பீர் கோரிக்கை வைத்திருக்கிறார்.இதனைத் தொடர்ந்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், ‘‘அதெல்லாம் முடியாது. ஷுப்மன் கில்லுக்கு போதுமான வாய்ப்பினை கொடுத்துவிட்டுதான், அணியை விட்டு நீக்கியுள்ளோம். மீண்டும் அவரை பிளேயிங் 11-ல் சேர்ப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கும்போது, மீண்டும் கேப்டன் பதவியை கொடுக்க முடியாது. ஏற்கனவே, டி20 அணியில், டாப் ஆர்டருக்கு கடும் போட்டி இருக்கிறது. இதனால், கில்லை மீண்டும் அணிக்கு கொண்டுவர வாய்ப்பே இல்லை’’ என அகார்கர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.ஆனால், அடுத்த சில மாதங்களில் ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கம்பீர், மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஐபிஎல் 2026 சீசனில், ஷுப்மன் கில் தொடர்ச்சியாக பெரிய ரன்களை அடித்ததால், அதன் அடிப்படையில் கில்லை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும். மூன்று பார்மெட்டிற்கும் ஒரே கேப்டன் இருந்தால்தான், ஒரே கேப்டனுக்கு கீழ், ஒரே கேப்டன்ஸி ஸ்டெய்லுக்கு கீழ், வீரர்களால் அழுத்தங்கள் இல்லாமல் விளையாட முடியும் என கம்பீர் தெரிவித்திருக்கிறார்.ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை என அகார்கர் கூற, இப்படி மாறி மாறி காரசார வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. இதனால், மீட்டிங்கை பாதியிலேயே முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.கம்பீர், ஷ்ரேயஸ் ஐயர் பிரச்சினை: ஐபிஎல் 2024 சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் இருந்த நிலையில், அப்போது அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் இருந்தார். அப்போது, கம்பீரின் ஆலோசனைகளை கேட்டு நடக்காமல், ஷ்ரேயஸ் ஐயர் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருந்தே, கம்பீர், ஷ்ரேயஸ் ஐயர் இருவருக்கும் இடையில், மனக்கசப்பு இருந்திருக்கிறது.இதனால்தான், சமீப காலமாகவே ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில், ஐபிஎல் தொடர், உள்ளூர் தொடர்களில் ஷ்ரேயஸ் ஐயர் அபாரமாக செயல்பட்டதால், தவிர்க்க முடியாத வீரராக ஷ்ரேயஸ் ஐயர் உருவெடுத்தார். மேலும், சூர்யகுமார் யாதவுக்கு மாற்றாக, அவர் விளையாடிய 4ஆவது இடத்தில் ஆடும் வீரருக்குதான் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என பிசிசிஐ கருதிய நிலையில், ராஜத் படிதர், ஷ்ரேயஸ் ஐயர் இருவரது பெயர்களை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் பரிசீலித்திருக்கிறார்.இறுதியில், அனுபவம் அடிப்பண்டையில், ஷ்ரேயஸ் ஐயரை கேப்டனாக தேர்வு செய்திருக்கிறார்கள். அப்போதே, தலைமை பயிற்சியாளர் கம்பீர் இதற்கு அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், பிசிசிஐ நிர்வாகிகளின் ஆதரவு ஷ்ரேயஸ் ஐயருக்கு இருந்ததால், ஷ்ரேயஸ் ஐயருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

