52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
CSK, MI Trading – ஹர்திக்கை கொடுக்க தயார்: இந்த 2 பேர் நிச்சயம் வேணும்: துபே இல்ல – MI கடைசி கோரிக்கை

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் அனுப்ப முடிவு செய்துள்ள நிலையில், அவரை வாங்க பல அணிகள், போட்டா போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக, தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில்தான் பலத்த போட்டி நிலவி வருகிறது.சிஎஸ்கே அணி, ஆயுஷ் மாத்ரேவையும், ஷிவம் துபேவையும் விட்டுக்கொடுத்தால், ஹர்திக் பாண்டியாவை விட்டுக்கொடுக்க தயார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க முடியாது என திட்டவட்டமாக சிஎஸ்கே தெரிவித்ததால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் டீல் பேசி வருகிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரை மாற்றாக விட்டுக்கொடுக்க முன் வந்துள்ளதால், இந்த டிரேடிங் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியாவோ, ‘தன்னை சிஎஸ்கேவுக்குதான் அனுப்ப வேண்டும். அங்கு செல்லதான் விரும்புகிறேன்’ என மும்பை இந்தியன்ஸிடம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், கடைசியாக ஒருமுறை சிஎஸ்கேவிடம் பேச்சு வார்த்தையை நடத்த முடிவு செய்து, அந்த கடைசி பேச்சு வார்த்தையில், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஆயுஷ் மாத்ரே மற்றும் கலீல் அகமது ஆகியோரை விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். மேலும், டாப் ஆர்டரில் ஆடதான் உங்களிடம் உர்வில் படேல் இருக்கிறாரே, பிறகு ஏன் ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க கூடாது என மும்பை இந்தியன்ஸ் கேட்டிருக்கிறது.மேலும், இந்த டீலுக்கு ஒத்து வரவில்லை என்றால், உடனே ஹர்திக் பாண்டியாவுக்கான பேச்சு வார்த்தைக்கு முற்று புள்ளி வைத்துவிடுவோம் என தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், சிஎஸ்கே நிர்வாகமோ, எக்காரணம் கொண்டும் இளம் வீரர்களை டிரேடிங்கில் அனுப்ப வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும், இதனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவிடம் எடுத்துக் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.தற்போது, ஹர்திக் பாண்டியாவுக்காக கேகேஆர் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், இறுதிக் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறதாம். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணாவை விட்டுக்கொடுக்க முன் வந்துள்ள நிலையில், டிரேடிங் கட்டணமாக 100 கோடியை, மும்பை இந்தியன்ஸ் கேட்கிறதாம். ஆனால், இரண்டு தரமான வீரர்களை மாற்றாக விட்டுக்கொடுப்பதால், டிரேடிங் கட்டணமாக 20 கோடி வரை மட்டுமே கொடுக்க முடியும் என கேகேஆர் அணி நிர்வாகம் உறுதியாக இருக்கிறதாம்.இப்படி, தற்போது டிரேடிங் கட்டணம் தொடர்பான பேச்சு வார்த்தைதான் இரு அணிகளுக்கும் இடையில் செல்கிறது. விரைவில், இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து, அதிகாரப்பூர்வமாக ஹர்திக் பாண்டியா, கேகேஆர் அணியில் இணைவார் எனக் கருதப்படுகிறது.கேகேஆர் அணியில், நீண்ட காலமாகவே கேப்டன்ஸி பிரச்சினை இருக்கிறது. தற்போது, ஹர்திக் பாண்டியா வந்திருப்பதால், அடுத்த 3-4 வருடங்களுக்கு இந்த பிரச்சினை இருக்காது எனக் கருதப்படுகிறது.மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், அடுத்து சூர்யகுமார் யாதவை டிரேடிங்கில் அனுப்புவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *