52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ரூ. 15,000 இல்ல, இனி ரூ. 30,000- தமிழக அரசு வெளியிடும் அறிவிப்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக விக்னேஷ் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதன் பின்னணியில் விளக்கிய அமைச்சர், இந்த விஷயத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் கடை மேலாண்மை, மது பாட்டில்கள் இறக்குமதி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்படும் செலவீனங்களை டாஸ்மாக் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. இதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என நம்பிக்கை அளித்திருக்கிறார்.

டாஸ்மாக் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிக்கை

இந்த சூழலில் டாஸ்மாக் ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விஷயமாக கோரிக்கை நீடித்து வருகிறது. இதை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. தற்போது சம்பள விவரத்தை எடுத்து பார்த்தால் அதிகபட்சமாக 17 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் சம்பள விவரம்

ஊழியர்கள் மாத சம்பளம்
கடை மேற்பார்வையாளர் ரூ. 17,850
விற்பனையாளர் ரூ. 15,530
உதவி விற்பனையாளர் ரூ. 14,340

சம்பளம் டபுள் மடங்கு உயர்வு - தமிழக அரசு

இந்த சூழலில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 30 ரூபாயாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தற்போது வாங்கும் சம்பளத்தை காட்டிலும் அப்படியே இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிப்பது மட்டுமின்றி வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும் என்கின்றனர்.

ஓய்வு பெறும் வயது உயர்வு, பணி நிரந்தர நடவடிக்கை

  • இதுதவிர ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தற்போது கடை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58. இதனை அரசு ஊழியர்களை போல 60ஆக உயர்த்தவுள்ளனர்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக பிரதான கோரிக்கையாக இருப்பது பணி நிரந்தரம். ஏனெனில் ஒப்பந்த ஊழியர்களாக நியமித்து விட்டு, எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு சிக்கல் வரும் நிலை தான் காணப்படுகிறது.
  • மதுவிலக்கு கொள்கையை செயல்படுத்தும் நோக்கில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே இதை நம்பி வருவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
  • சில ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றி விட்டு, திடீரென வேலை பறிபோனால் மாற்று வேலையை தேடுவது எளிதான காரியமல்ல. அது குடும்பம் நடத்துவோருக்கு பெரிய நெருக்கடியாக மாறிவிடும்.
  • எனவே டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய், அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை

இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட முதலமைச்சர் விஜய், ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சம்பள உயர்வு, ஓய்வு பெறும் வயது உயர்வு, பணி நிரந்தரம் ஆகிய மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் ஊழியர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும். கமிஷன் வாங்காமல், முறைகேடுகள் தவிர்க்கும் வகையில் வேலை செய்வதற்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *