குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை!
தற்போதைய 7ஆவது ஊதியக் குழுவின் சம்பள அமைப்பின் கீழ், ஒரு குடும்பம் என்பது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அலகாகக் (Unit) கருதப்படுகிறது. இருப்பினும், அகில இந்திய NPS ஊழியர்கள் கூட்டமைப்பு (AINPSEF), ஊழியர்களைச் சார்ந்திருக்கும் பெற்றோர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் இந்த அலகு 4.4 ஆக அதிகரிக்கும். இந்த மாற்றத்தின் காரணமாக, ஃபிட்மென்ட் காரணி 2.05லிருந்து 2.10 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு, லெவல்-1 ஊழியர்களின் திருத்தப்பட்ட அடிப்படைச் சம்பளத்தை நேரடியாக உயர்த்தும்.
வீட்டு வாடகைப்படி மற்றும் பயணப்படி!
முக்கிய நகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் வாழ்க்கைச் செலவு மற்றும் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்துள்ளதால் தற்போதைய படிகள் போதுமானதாக இல்லை என்று ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன.வீட்டு வாடகைப்படி: X, Y மற்றும் Z பிரிவு நகரங்களுக்கு முறையே 36%, 24% மற்றும் 12% வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்று சங்கங்கள் முன்மொழிந்துள்ளன. சில அமைப்புகள் எதிர்காலத்தில் இதை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றன.பயணப்படி: லெவல்-1 ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர பயணப்படியாக ரூ. 9,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள படியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
அகவிலைப்படி இணைப்பு!
அகவிலைப்படி 25 சதவீதம் அல்லது 50 சதவீதத்தைத் தாண்டும் போதெல்லாம், அதை அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்பது சங்கங்களின் முக்கிய கோரிக்கையாகும். இது எதிர்கால ஊதிய மாற்றங்கள், பணிக்கொடை (Gratuity) மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு பலமான அடித்தளத்தை வழங்கும் என்று கூறுகின்றனர். இந்த ஃபார்முலா நடைமுறைப்படுத்தப்பட்டால் மொத்த மாதாந்திர சம்பளம் 37,080 ரூபாயில் இருந்து ரூ. 61,344 ஆக உயரும். இது நேரடியாக சுமார் 65 சதவீத உயர்வுக்கு வழிவகுக்கும்.
இந்த முடிவு இறுதியாக இருக்குமா?
இவை அனைத்தும் AINPSEF, NC-JCM மற்றும் AIDEF போன்ற முக்கிய ஊழியர் அமைப்புகளால் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. 8ஆவது ஊதியக் குழு அமைக்கப்பட்டு அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, ஃபிட்மென்ட் காரணி மற்றும் இதர படிகள் குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும்.
புதிய விதிமுறை எப்போது அமலுக்கு வரும்?
பொதுவாக, ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பபடுவதற்கு சிறிது காலம் எடுக்கும். இருப்பினும், விரைவில் ஊதியக் குழுவை அமைக்குமாறு மத்திய ஊழியர் அமைப்புகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு இதற்கான கட்டமைப்பை இறுதி செய்தால் 1 கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் புதிய ஆண்டில் பெரிய நிதிப் பலன்களைப் பெறலாம்.

