52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
CSK – சிஎஸ்கேவில் இருக்கும் 3 பலவீனங்கள்: சரிசெய்ய யார் யாரை வாங்கணும்: விபரம் இதோ

ஐபிஎலில் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி, அதிகமுறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களாகவே லீக் சுற்றோடு வெளியேறிவிட்டது.இதனால், ஐபிஎல் 2027 சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. இந்நிலையில், அணியில் இருக்கும் பலவீனத்தை சரி செய்வதற்காக டிரேடிங்கிலும், ஏலத்திலும் தரமான வீரர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. தற்போது, சிஎஸ்கேவில் இருக்கும் மூன்று முக்கிய பலவீனங்கள் குறித்து பார்க்கலாம்.1. வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், மேட்ச் வின்னிங் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லை. ஷிவம் துபேவால் பேட்டிங்கில் மட்டுமே தொடர்ச்சியாக அதிரடி காட்ட முடிகிறது. இதனால், டிரேடிங்கில், தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை வாங்க வேண்டும்.ஹர்திக் பாண்டியா, டிரேடிங்கில் கிடைத்தாலும், அவரை வாங்க கேகேஆர் உட்பட சில அணிகள், ஆஃபர்களை அள்ளி வீசுவதால், சிஎஸ்கே வாங்குவது சற்று கடினம்தான். பஞ்சாப் கிங்ஸுக்கு டெத் பௌலிங் பலவீனம் இருக்கிறது. இதனால், நேதன் எல்லிஸை அங்கு கொடுத்துவிட்டு, மாற்றாக அங்கிருந்து மார்கோ யான்சனை வாங்க முடியும்.இப்படியில்லை என்றால், ஏலத்திற்கு வரும் பென் ஸ்டோக்ஸை சிஎஸ்கே டார்கெட் செய்ய வேண்டும். இப்படி, இந்த மூன்று வீரர்களில் ஒருவரை வாங்கிவிட்டால், சிஎஸ்கேவின் ஒரு பலவீனம் சரியாகிவிடும்.2. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்: ரவீந்திர ஜடேஜா போனப் பிறகு, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம் காலியாகவே இருக்கிறது. அகில் ஹோசைன், பிரசாந்த் வீர் போன்றவர்களால், மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டர்களாக இருக்க முடியவில்லை. இதனால், குஜராத் டைடன்ஸ் அணியில், பெஞ்சில் அமர்ந்திருக்கும், தமிழக வீரர் சாய் கிஷோரை வாங்க முயற்சிக்க வேண்டும். இதனால், சாய் கிஷோருக்கும், நல்ல எதிர்காலம் அமையும்.3. ஸ்டார் பௌலர் இல்லை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தரமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் இல்லை. இது, அணிக்கு பெரிய குறையாக இருக்கிறது. பவர் பிளே, டெத் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இந்திய ஸ்டார் பௌலர்கள் இல்லாத காரணத்தினால், எதிரணிகள் அசால்ட்டாக சிஎஸ்கேவுக்கு எதிராக ரன்களை குவிக்கிறது.அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது போன்றவர்கள், அவ்வபோதுதான் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால், டிரேடிங்கிலேயோ அல்லது ஏலத்திலேயே சிஎஸ்கே அணி, தரமான இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை வாங்கியாக வேண்டும்.பெரிய பிரச்சினை: இப்படி, இந்த மூன்று பலவீனங்களும், பந்துவீச்சு துறையில்தான் இருக்கிறது. பேட்டிங்கில் ஒரு பலவீனம், பந்துவீச்சில் ஒரு பலவீனம் என இருந்தால் கூட, அதனை மற்ற வீரர்களை வைத்து சரி செய்துவிட முடியும். ஆனால், பலவீனங்கள், முழுக்க முழுக்க பந்துவீச்சில்தான் இருக்கிறது. இப்படி, ஒரே துறையில் அதிக பலவீனங்கள் இருப்பதால், இதனை சரி செய்யாமல், ஐபிஎல் 2027 சீசனுக்கு போனால், அது சிஎஸ்கேவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.ஆகையால், கடந்த மூன்று சீசன்களின் ஏலத்தில் சொதப்பியதுபோல் இல்லாமல், ஐபிஎல் 2027 சீசனின் ஏலத்திலும், டிரேடிங்கிலும், அபாரமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *