52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
CSK, SRH Trading – ஹென்ட்ரி கிளாசனை வாங்கிட்டு, இந்த 2 வீரர்களை கொடுங்க: சிஎஸ்கேவிடம் கேட்ட SRH

ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே போன்ற பெரிய பெரிய வீரர்களின் பெயர்கள், டிரேடிங் பேச்சு வார்த்தையில் அடிபடுவதால், முன்பு எப்போதும் இல்லாத வகையில், ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்புகொண்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2 வீரர்களை கேட்டுள்ளது.என்ன காரணம்? சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, ஒரு தரமான வெளிநாட்டு ஸ்பின்னர் தேவை. மேலும், மிடில் வரிசையில் அபாரமாக ஆடக் கூடிய ஒரு பேட்டரும் தேவை. இதனால், சிஎஸ்கேவிடம் நூர் அகமது, ஷிவம் துபே ஆகியோரை சன் ரைசர்ஸ் அணி கேட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பே இதுகுறித்து சிஎஸ்கேவிடம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், சிஎஸ்கே எந்த பதிலையும் கூறாமல் இருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.அதாவது, டிரேடிங்கில் ஹர்திக் பாண்டியாவை வாங்க முடியவில்லை என்றால், மேலும், மற்ற தரமான வீரர் யாரையும் வாங்க முடியவில்லை என்றால் மட்டுமே, இந்த டீல் குறித்து, சன் ரைசர்ஸை தொடர்புகொள்ள சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக, கிளாசனுக்கு மாற்றாக அதிகபட்சமாக ஷிவம் துபேவை மட்டுமே விட்டுக்கொடுக்க முடியும் என்ற நிலைபாட்டிலும் சிஎஸ்கே உள்ளது.நூர் அகமது கடந்த இரண்டு சீசன்களாக சிஎஸ்கேவுக்கக தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி வருவதால், அவரை ஒருபோதும் டிரேடிங்கில் அனுப்ப முடியாது எனவும் சிஎஸ்கே திட்டவட்டமான முடிவில் இருக்கிறது. இதற்கு சன் ரைசர்ஸ் சம்மதிக்குமா என்பது சந்தேகம்தான்.மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இருநு பிரசாந்த் வீரை வாங்கவும் சன் ரைசர்ஸ் அணி, திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இவரை 14.20 கோடி கொடுத்து வாங்க முடியாது என்றும், 2 கோடிக்கு மேல் இவருக்காக செலவு செய்ய கூடாது என்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முடிவு செய்துள்ளது.ஒருவேளை, பிரசாந்த் வீர் ஐபிஎல் 2027 ஏலத்திற்கு சென்றாலும், இவரை 2 கோடிக்கு மேல், எந்த அணியும் வாங்குவது கடினம் என்பதால், சன் ரைசர்ஸுக்கு டிரேடிங்கில் செல்லவே பிரசாந்த் வீர் விரும்புவார் எனக் கருதப்படுகிறது.ஹர்திக் பாண்டியா வாங்க பேச்சு வார்த்தை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை, டிரேடிங்கில் வாங்க தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியாவை வாங்கினால், அவருக்கு கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும் என்பதாலும், ஹர்திக்கிற்கு மாற்றாக ஷிவம் துபே, ஆயுஷ் மாத்ரே ஆகியோரை கேட்டு, மும்பை இந்தியன்ஸ் அடம்பிடிப்பதாலும், சிஎஸ்கே தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளது.மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு 32 வயதாகிறது. இவரால், அடுத்த 2 சீசன்கள் வரை மட்டுமே சிறப்பாக ஆட முடியும் என்பதால், இவருக்கு மாற்றாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க, சிஎஸ்கே தயங்குகிறது. அந்த 2 சீசனுக்கு, ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியையும் கொடுக்க வேண்டும். இப்படி சில பிரச்சினைகள் இருப்பதால், ஹர்திக்கை வாங்க சிஎஸ்கே தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *