52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
விடியல் நீக்கம்: சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது – தவெக மீது திமுக கடும் தாக்கு

கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயரினை, புதிதாக ஆட்சி அமைத்துள்ள மாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கனவே நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது சர்ச்சைகளை கிளப்பியது. இது சம்பந்தமாக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர். இந்நிலையில் திமுகவின் மற்றொரு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக தற்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பெயர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அப்படி ஒரு திட்டம் தான் மகளிர் விடியல் பயணம். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதலமைச்சராக திட்டத்தில் தனது முதல் கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின். இந்த திட்டத்தின் மூலமாக நகரப் பேருந்துகளில் மகளிர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்தனர். இத்திட்டம் பெண்கள் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் மகளிர் கட்டணமில்லா திட்டம் செயல்படுத்தப்பட்டது. இநிலையில் இன்றைய தினம் சில இடங்களில் அரசு பேருந்துகளில் விடியல் என்ற பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக வெறும் மகளிர் பயணம் என்று மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மகளிர் விடியல் பயணம் என்ற பெயர் மாற்றப்பட்டு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் இது சம்பந்தமாக விவாதங்கள் எழுந்துள்ளது. அதோடு திமுகவினர் இது சம்பந்தமாக தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக இணையத்தள பிரிவான ஐடி விங் மகளிர் விடியல் பயணம் பெயர் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக காட்டமாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளது.அதில் கூறப்பட்டு இருப்பதாவது, மேடைக்கு மேடை மாற்றம் மாற்றம் என்று முழங்கிவிட்டு, கடைசியில் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது தான் தவெக அரசின் சாதனையா? என்ற கேள்வி அந்த பதிவில் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், விடியல் இல்லாத தமிழ்நாடு என்பதை உணர்ந்த சோபா மாடல் அரசு, விடியல் என்ற வார்த்தையை பேருந்துகளில் இருந்து நீக்கியுள்ளது.திட்டத்தின் பெயரை மாற்றி விட்டால் கொண்டு வந்தவருடைய புகழ் மங்கிடும் என்று நினைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களே சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடாது. தமிழ்நாட்டில் எந்த பேருந்தில் ஏறினாலும் பெண்களுக்கு இலவசம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்களே, அதனை நிறைவேற்றுவதற்கு துப்பில்லை. வக்கில்லை. ஆனால் முந்தையை ஆட்சியுடைய உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயர் பலகையை மாற்றுவதில் மட்டும் தவெக அரசு படுவேகமாக செயல்படுகிறது என கடும் விமர்சனங்கள் பதிவில் முன்வைக்கப்பட்டுள்ளது.அதே போல் திமுக என்ஆர்ஐ விங் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், தமிழ்நாட்டில் இருந்த விடியலை நீக்கியதன் அடையாளமாக, 'விடியல்' என்ற வார்த்தையை திட்டங்களில் இருந்து சோஃபா மாடல் அரசு நீக்கி வருகிறது. தற்போதைய முதலமைச்சருக்கு, முதல்வர் என்றால் ஸ்டாலினும், விடியல் என்றால் திமுக ஆட்சியும் நினைவுக்கு வரும். இவ்வளவு insecurity எதற்கு ப்ரோ? என்ற விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *