52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
ஏடிஎம் கார்டில் இலவசமாக கிடைக்கும் 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ்: அதை வாங்குவது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் பணம் எடுப்பது முதல் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது வரை பல்வேறு நிதிப் பரிவர்த்தனைகளுக்காக ஏடிஎம் கார்டை நாம் பரவலாகப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான மக்கள், என்பது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஆனால், இந்த ஏடிஎம் கார்டுகளுடன் ரூ. 5 லட்சம் வரை இலவச விபத்துக் வழங்கப்படுகிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்தச் சலுகையை எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்குகின்றன.இருப்பினும், இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால், பல வாடிக்கையாளர்கள் இந்த வசதியை அறியாமலும், அதை எவ்வாறு கோருவது (Claim) என்று தெரியாமலும் இருக்கிறார்கள். கார்டுகளின் வகையைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை மாறுபடும். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.கிளாசிக் (Classic) அல்லது ரூபே (RuPay) கார்டு: ரூ. 1 லட்சம் வரை விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.பிளாட்டினம் (Platinum) கார்டு: ரூ. 2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.பிரீமியம் (Premium) அல்லது விசா (Visa) கார்டு: அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.விபத்து காரணமாக கார்டு உரிமையாளர் உயிரிழக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினர் இந்த காப்பீட்டுத் தொகையைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.முக்கியமான நிபந்தனைகள்!இந்தக் காப்பீட்டின் பலனைப் பெற வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட "செயல்பாட்டுக் காலம்" (Activity Period) என்ற மிக முக்கியமான நிபந்தனை ஒன்று உள்ளது. விபத்து நடப்பதற்கு முந்தைய 30 முதல் 90 நாட்களுக்குள் (வங்கியின் கொள்கையைப் பொறுத்து), அந்த ஏடிஎம் கார்டு செயலில் இருந்திருக்க வேண்டும். அதாவது, அந்த கார்டைப் பயன்படுத்தி குறைந்தது ஒரு வெற்றிகரமான நிதிப் பரிவர்த்தனையாவது செய்யப்பட்டிருக்க வேண்டும்.காப்பீட்டுத் தொகையை எவ்வாறு பெறுவது?துரதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் ஏற்பட்டால், ஏடிஎம் கார்டு உரிமையாளரால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர் (Nominee), சம்பந்தப்பட்ட வங்கி கிளையை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும். வங்கி வழங்கும் காப்பீட்டுக் கோரிக்கை படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களைச் சரிபார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் காப்பீட்டு நிறுவனம் அந்தத் தொகையை வாரிசுதாரரின் கணக்கிற்கு உடனடியாக மாற்றும்.தேவையான ஆவணங்கள்!காப்பீட்டைக் கோரும்போது பின்வரும் ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்:
  • கார்டு உரிமையாளரின் இறப்புச் சான்றிதழ் (Death Certificate)
  • காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை நகல் (FIR copy)
  • பிரேத பரிசோதனை அறிக்கை (Post mortem report)
  • முறையான வாரிசுச் சான்றிதழ் (Nominee certificate)
  • இறந்தவரின் ஏடிஎம் கார்டு நகல் (Photocopy of card)
  • கார்டு செயலில் இருந்ததைக் காட்டும் கடந்த 90 நாட்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை (Bank Statement)

வங்கிச் சேவைகள் விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற நிறைய நன்மைகளும் சலுகைகளும் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததால்தான் நிறையப் பேர் இந்த வசதிகளைப் பயன்படுத்துவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *