தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னையில் ஐந்து நாட்கள் நடைபெறும் "" முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.பயிற்சி நாட்கள்: 13.07.2026 முதல் 17.07.2026 வரை (5 நாட்கள்)நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரைஇடம்: EDII நிறுவன வளாகம், கிண்டி, சென்னை.பயிற்சியில் கற்றுக்கொள்ளும் முக்கிய அம்சங்கள்!தரம் அறிதல்: மற்றும் போன்ற உலோகங்களின் தரம் மற்றும் கேரட் (Carat) மதிப்பீடுகள்.சோதனை முறைகள்: ஆசிட் சோதனை, எடை அளவு கணக்கிடுதல், ஹால்மார்க் (Hallmark) மற்றும் போலி நகைகளைக் கண்டறியும் வழிமுறைகள்.விலை நிர்ணயம்: சந்தை விலை (Board Rate) நிர்ணயிக்கும் முறை மற்றும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள்.அரசு திட்டங்கள்: மத்திய, மாநில அரசுகளின் கடனுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகள்.வேலைவாய்ப்பு: பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) வேலை பெறுவதற்கான வழிகாட்டல்கள்.தகுதிகள் மற்றும் வசதிகள்!வயது வரம்பு: 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.யாரெல்லாம் பங்கேற்கலாம்?ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், திருநம்பிகள்).தங்கும் வசதி: வெளியூர்களில் இருந்து வரும் பயனாளிகளுக்குக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதி உள்ளது. (தேவைப்படுவோர் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்).முக்கிய அறிவிப்பு: பயிற்சி நிறைவடைந்தவுடன் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும்.முன்பதிவு மற்றும் தொடர்புக்கு!இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.இணையதளம்: கைபேசி எண்கள்: 8668100181 / 9360221280(திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் தொடர்புகொள்ள வேண்டும்)முகவரி:தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII),ஈக்காட்டுத்தாங்கல், சிட்கோ தொழிற்பேட்டை,கிண்டி, சென்னை - 600 032.இதேபோல, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ஐடி (IT) மற்றும் ஸ்டார்ட்-அப் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக 3 நாட்கள் நடைபெறும் "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி (App) உருவாக்கம்" என்ற முழுநேரப் பயிற்சியை வழங்க உள்ளது.பயிற்சி நாட்கள்: 15.07.2026 முதல் 17.07.2026 வரை (3 நாட்கள்)நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரைஇடம்: EDII நிறுவன வளாகம், கிண்டி, சென்னை.பயிற்சியின் முக்கிய சிறப்பம்சங்கள்!AI Prototypes உருவாக்கம்: உங்கள் சொந்த ஐடியாக்களை (Ideas) செயற்கை நுண்ணறிவின் உதவியோடு எப்படி ஒரு முழுமையான செயலியாக (App) மாற்றுவது என்பது பற்றிய நேரடிப் பயிற்சி.No-Code / Low-Code கருவிகள்: கோடிங் (Coding) அறிவு இல்லாமலேயே, இன்றைய முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயன்படுத்தும் அதிநவீன No-Code மற்றும் Low-Code AI கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுத்தரப்படும்.தொழில்நுட்ப வழிகாட்டல்: புதிய செயலிகளை உருவாக்கி, அதனை வணிக ரீதியாக எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.யாரெல்லாம் பங்குபெறலாம்?
- புதிய மொபைல் அல்லது வெப் செயலிகளை உருவாக்க விரும்பும் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்.
- கோடிங் தெரியாமல் சொந்தமாக ஆப் (App) உருவாக்க நினைக்கும் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள்.
முன்பதிவு மற்றும் விவரங்கள்!பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களைப் பெறவும், முன்பதிவு செய்திடவும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான பக்கத்தைப் பார்வையிடலாம்.

