52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IPL 2027 – ரோஹித் சர்மாவுக்கு மாற்று: தரமான, இந்த இளம் ஓபனரை வாங்க மும்பை இந்தியன்ஸ் முடிவு

மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. ஐபிஎல் 2027 சீசனில், அணியில் பெரும்பாலான வீரர்கள் இளம் வீரர்களாக இருக்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விரும்புகிறது. அதற்கு ஏற்ப, சீனியர்கள் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை டிரேடிங்கில் அனுப்பிவிட்டு, இளம் வீரர்களை வாங்க முடிவு செய்துள்ளனர்.ரோஹித் சர்மாவுக்கு தற்போது 39 வயதாகிறது. இவரை டிரேடிங்கில் அனுப்பும் எண்ணம், மும்பை இந்தியன்ஸுக்கு இல்லை. காரணம், அணிக்காக 5 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என்பதால், ரோஹித் சர்மா விரும்பும்வரை அவர் மும்பை இந்தியன்ஸில் நீடிக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இருப்பினும், அதிக வயது காரணமாக, ரோஹித் சர்மா அடுத்த சீசனோடு ஓய்வு பெறவும் வாய்ப்புள்ளது. இதனால், ரோஹித் சர்மா இடத்தை நிரப்ப, இந்திய இளம் ஸ்டார் வீரரை அணிக்குள் கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.சன் ரைசர்ஸிடம் பேச முடிவு: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக அபாரமாக விளையாடிய இஷான் கிஷனை, மும்பை இந்தியன்ஸ் கழற்றிவிட்ட நிலையில், அவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. தற்போது, இஷான் கிஷன் முரட்டு பார்மில் இருக்கிறார். இருப்பினும், சன் ரைசர்ஸ் அணியில், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஓபனர்களாக இருப்பதால், இஷான் கிஷனுக்கு ஒன்டவுன் இடம் மட்டுமே கிடைக்கிறது.இந்நிலையில், இஷான் கிஷனை மீண்டும் வாங்கி, அவரை நிரந்தர ஓபனராக ஆட வைக்க மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பேச்சு வார்த்தையை நடத்த முடிவு செய்துள்ளனர். இஷான் கிஷனை வாங்க, எந்த எல்லைக்கும் செல்ல, மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளதாம். அதாவது, டிரேடிங் கட்டணமாக 100 கோடியையும், இஷான் கிஷனுக்காக 25 கோடியையும் கொடுக்க மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒருவேளை, இஷான் கிஷனுக்காக திலக் வர்மாவை கொடுத்துவிட்டு கூட, கிஷனை பெற்றாக வேண்டும் என்ற உறுதியான முடிவை மும்பை இந்தியன்ஸ் எடுத்துள்ளதாம்.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, தரமான மிடில் வரிசை பேட்டர் தேவைப்படுகிறார். இதனால், திலக் வர்மாவை விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் முன் வந்தால், அதனை நிச்சயம் சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், ஹர்திக் பாண்டியாவை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு அனுப்பிவிட்டு, ஜோப்ரா ஆர்ச்சரை வாங்க திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, சூர்யகுமார் யாதவை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனுப்பிவிட்டு, மாற்றாக ஹர்ஷித் ராணா, அங்கிரிஷ் ரகுவன்ஷியை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், ராணாவுடன் வருண் சக்ரவர்த்தியை மட்டுமே அனுப்ப முடியும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், பேச்சு வார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மட்டும், இந்த டிரேடிங் டீல்களை வெற்றிகரமாக முடித்துவிட்டால், ஐபிஎல் 2027 சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணி, பலமிக்க அணியாக உருவாகும். இதனால், மும்பை இந்தியன்ஸ் டிரேடிங் டீல் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *