விபத்து எங்கு, எப்படி நடந்தது? - முழு பின்னணி
- வியட்நாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற கடற்கரைத் தீவுதான் ஃபூ குவோக். விடுமுறையைக் கொண்டாட இந்தியாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்வது வழக்கம்.
- விபத்துக்குள்ளான படகு 'ஹான் மே ரட்' (Hon May Rut) என்ற தீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு 'அன் தோய்' (An Thoi) துறைமுகத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது.
- அப்போது கடலில் திடீரென ராட்சத அலைகளுடன் கடுமையான சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகப் படகு கட்டுப்பாட்டை இழந்து, நடுக் கடலில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
- அந்த அதிவேகப் படகில் மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 படகு ஊழியர்கள் மற்றும் ஒரு உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி என மொத்தம் 36 பேர் பயணித்துள்ளனர்.
21 பேர் உயிர் தப்பினர்படகு கவிழ்ந்த உடனே அருகில் இருந்த பிற சுற்றுலாப் படகுகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் குதித்தனர். தகவல் அறிந்து வியட்நாம் கடலோரக் காவல்படையினரும் (Vietnam Coast Guard) சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.கடல் அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியில் பெரும் தொய்வு ஏற்பட்டது. விபத்தின் போது பல பயணிகள் படகின் உட்பகுதியிலேயே சிக்கிக்கொண்டதால், அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இருப்பினும், மீட்புக் குழுவினரின் தீவிர முயற்சியால் 21 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய தூதரகம் அமைத்துள்ள அவசர உதவி எண்கள்
இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் (Hanoi) மற்றும் ஹோ சி மின் நகரில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் உடனடியாக வியட்நாம் அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு விவரங்களை அறியவும், உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 24 மணி நேர அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன ஹோ சி மின் நகர் கட்டுப்பாட்டு அறை: +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414 ஹனோய் தூதரக கட்டுப்பாட்டு அறை: +84 91 308 9165 பாதிக்கப்பட்ட இந்தியர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களைச் சட்டப்பூர்வ நடைமுறைகளுக்குப் பிறகு விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

