தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து அரசு பள்ளிகளில் தவெகவினர் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுப்பதாக சர்ச்சைகளை எழுந்தது. அதோடு முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை பள்ளி அறையில் மாட்டியது, மாணவர்களிடம் அவரின் புகைப்படத்தை காட்டி பேசியது உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தது பல விதமான எதிர்ப்புகளை கிளப்பியது. இந்நிலையில் நேற்றைய தினம் கரூரில் விஜய் பேசுது அரசுப்பள்ளி ஒன்றில் நேரலையாக மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.நேற்றைய தினம் கரூருக்கு சென்ற முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார். இதனை கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் நேரலையாக மாணவர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து இதுவரை இந்த மாதிரியான சம்பவங்கள் பிற ஆட்சியில் நடந்தது இல்லையென எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.இந்நிலையில் விஸ்வநாதன் இவ்விவகாரம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கரூரில் முதல்வர் பேசியதை நேரலை செய்து இருக்கிறார்கள். இது சரியா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு, அதுல என்ன இருக்கு சார் என்று கூறினார். பின்னர் இதுப்பற்றி அவுங்களை தான் கேட்கனும். விசாரணை செய்யனும் என்றார். அதனை தொடர்ந்து அவரிடம் பள்ளிகளில் இதுபோன்று முதல்வர் பேசுவதை நேரலை செய்யலாமா? இதுவரை இப்படியான ஒரு நிகழ்வு நடந்தது இல்லை எனவும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு எல்லாரும் பண்ணி இருக்காங்க. இது ஒன்றும் புதுசு கிடையாது என்றார். இத்னைக்கேட்டு அதிர்ச்சியான செய்தியாளர்கள் இதற்கு முன்பாக யார் பண்ணி இருக்கீங்க என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கும் எல்லாரும் பண்ணி இருக்கிறார்கள். அவ்வளவு தான். இதற்கு மேல் கேள்விக்கு இடமில்லை என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.உயர்கல்வித்துறை அமைச்சரான விஸ்வநாதனின் இந்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பள்ளிகள் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய ஒரு இடம். அங்கு தனிப்பட்ட கட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பு செய்வது எந்த வகையில் சரியானதாக இருக்கும். இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா? இப்படியா இதுல என்ன இருக்கு என்று அவர் கருத்து சொல்லலாம் என சமூக ஆர்வலர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி நேரலை செய்யப்பட அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவர் எவ்வித அனுமதியும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து துறை விதிமுறைகளை முழுமையாக மீறியுள்ளார். இதனால் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை. கல்வி கற்பதற்கான இடமாக மட்டுமே பள்ளிக்கூடம் இருக்க வேண்டும். அரசியலுக்கான களமில்லை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எந்தவொரு பள்ளியிலும் நடக்கக்கூடாது என கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

