52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
முதல்வருக்கு இது குற்றமென்று தெரியாதா.. சிபிஐ விசாரணையில் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தீர்களா?: அப்பாவு கேள்வி

நேற்றைய தினம் கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் தெரிவித்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. தொடர்ந்து அவர் பகிர்ந்த தகவல்கள் குறித்து விவாதங்களும் வெடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் முதல்வரின் பேச்சு குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுகவை சார்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு, முதல்வரின் பேச்சு குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.கடந்தாண்டு கரூரில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிரிழந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்திற்கு பின்பாக முதன்முறையாக நேற்றைய தினம் கரூருக்கு வருகை தந்தார் முதல்வர் ஜோசப் விஜய். அப்போது கரூர் துயர சம்பவம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார். அதாவது எங்களை பைபாஸிலே போலீசார் கரூரில் கூட்டம் அதிகமாக உள்ளது என்று அலர்ட் செய்திருக்கலாம்எங்களிடம் சொல்லாமல் அசாதாரணமான சூழல் நிலவுவதாக அவர்களே மீட்டிங்கை கேன்சலும் பண்ணிருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல், அவர்களே எங்களை அழைத்து போனார்கள். இந்த நாடகம் பற்றியெல்லாம் தெரியாமல், நன்றி கூறினேன். இப்படியொரு நாடகம் நடக்குமென்று எனக்கு தெரியாமல் போய்விட்டது என பேசி இருந்தார். கரூர் சம்பவத்திற்கு காவல் துறையே காரணம் என்பதை போன்று அவரின் பேச்சு அமைந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் திமுகவை சார்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைத்தள பக்கத்தில் முதல்வரின் பேச்சு குறித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையில் 41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் பற்றி பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம். இந்த விவரம் தெரியாதவரா எங்களுடைய தமிழ்நாட்டின் முதல்வர்? பதவி பிரமாணத்திற்கு இது எதிரான குற்றம் என்று முதல்வருக்கு தெரியாதா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ந்து அரசு தலைமை செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு தமிழக முதல்வர் ஆட்சி நடத்துகிறாரா? அல்லது சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் வழிகாட்டுதலுடன் ஆணவ வசனம் பேசி வருகிறாரா எனவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் பார்ட்டி பண்ட் சம்பந்தமாக கரூரில் முதல்வர் விஜய் பேசியதற்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் அப்பாவு.அதாவது சட்டமன்றத்தில் பார்ட்டி பண்ட் என்று சொன்னதும் திமுகவுடன் ஓடி விட்டார்கள் என்று வாய்மொழியாகவும், உடல் மொழி வாயிலாகவும் நக்கலடிக்கும் சிஎம் சார் தேர்தலுக்கு முன்பாக உங்கள் சட்டமன்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் ரூ. 2 கோடி முதல் பத்து கோடி வரை பார்ட்டி பண்ட் பெற்றுக் கொண்டு தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக உங்கள் ரசிகர்களும், தவெக கட்சியினரு புலம்புவது உங்கள் காடுகளுக்கு எட்டவில்லையா? இது பார்ட்டி பண்ட் இல்லையா? இதுதான் தூய கட்சி ஆட்சியின் லட்சணமா? எனவும் சரமாரியாக கேள்விகளை தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார் அப்பாவு. அவருடைய பதிவு கவனம் பெற்று வரும் நிலையில், கமெண்ட்களும் குவிந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் அதிமுகவை சார்ந்தவர்களும் முதல்வர் விஜய்யின் பேச்சு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *