எல் நினோவால் ஏற்படும் பாதிப்பு
- 2027 ஜனவரி முதலே வழக்கத்தைவிட முன்கூட்டியே கோடை வெப்பம் உணரப்படலாம் எனக் கூறப்படுகிறது.எல் நினோ வலுப்பெறுவதால் கடுமையான , ஒழுங்கற்ற ஆனால் தீவிரமான பருவமழை, நீண்ட வறட்சி ஏற்படலாம்.
- இந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் வெப்பநிலை இயல்பைவிட 1.5°C-2°C வரை உயர்க்கூடும்.
- சென்னையின் டிசம்பர்-பிப்ரவரி குளிர் காலமும் வழக்கத்தைவிட அதிக வெப்பமாக இருக்கலாம்.
- ஒரு மணி நேர மழை 20 நிமிடங்களில் பெய்து, நகர்ப்புற வெள்ளம் மற்றும் நீர்தேக்க அபாயத்தை அதிகரிக்கலாம்.
- எல் நினோ வெப்பமயமாதல் 3-4 மாதங்கள் நீடித்து, பகல் மற்றும் இரவு வெப்பநிலையை உயர்த்தக்கூடும்.
- உலகின் பல பகுதிகளிலும், இந்திய துணைக்கண்டத்திலும் வெப்ப அலை, வறட்சி, தீவிர வானிலை அபாயம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தரையை அடைவதற்கு முன்பே ஆவியாகும்ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இது குறித்து புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) மேற்கொண்ட ஆய்வின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் பருவமழைக் காலத்தில் சராசரியாக 25% மழைத்துளிகள் தரையை அடைவதற்கு முன்பே ஆவியாகிவிடுகின்றன. இருப்பினும், இந்த அளவு தினந்தோறும் மாறுபட்டு, 4% முதல் 61% வரை பதிவாகியுள்ளது.
ஐஐடிஎம் ஆய்வு சொல்லும் உண்மை!
இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரான சைகத் சென்குப்தா கூறுகையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைத்துளி ஆவியாகும் அளவை நேரடி கண்காணிப்பின் மூலம் கணக்கிட்டது இதுவே முதல் முறை என்றும், இந்த முறையை இந்தியா முழுவதும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தானின் வறண்ட பகுதி முதல் அதிக மழை பெய்யும் கடலோரப் பகுதிகள் வரை, வெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து இந்த ஆவியாகும் அளவு எப்படி மாறுபடுகிறது என்பதை இந்தியா முழுவதும் வரைபடமாக உருவாக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் முதல் படிதான் இந்த புனே ஆராய்ச்சி. இதற்காக இமயமலை முதல் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் போர்ட் பிளேயர் வரை 9 இடங்களில், கடந்த 10 ஆண்டுகளாகவே ஐஐடிஎம் (IITM) மழைநீர் மாதிரிகளைச் சேகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளோடு ஒப்பிடுகையில்...
- இந்தியாவில் 25% ஆவியாகிறது என்பது உலகளாவிய மற்ற கணக்குகளோடு ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவுதான்.
- சாட்டிலைட் தரவுகளின்படி, வெப்பமண்டலப் பகுதிகளில் (Tropics) ஆவியாதல் 20% ஆக இருக்கிறது.
- சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 40%-ஆகவும், பார்படாஸ் தீவுகளில் 60%-ஆகவும் இருக்கிறது.
- இதற்கு காரணம் பார்படாஸ் போன்ற இடங்களில் காற்று மிகவும் வறண்டதாகவும், மழைத்துளிகள் மிகச் சிறியதாகவும் இருக்கும். தூறல் போடும்போது சிறிய துளிகள் சட்டென்று ஆவியாகிவிடும்.
- ஆனால் பலத்த மழையின் போது பெரிய துளிகள் அவ்வளவாக ஆவியாகாது.
ஏன் இந்த ஆய்வு முக்கியம்?
இதுவரை இந்திய வானிலை ஆய்வு மையங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மாடல்களில் , மேகத்திலிருந்து விழும் மழைத்துளி காற்றில் எவ்வளவு தூரம் ஆவியாகிறது என்ற துல்லியமான கணக்கு இல்லை. இதனால் பல நேரங்களில் 'இவ்வளவு மழை பெய்யும்' என்று கணிப்பது தவறாகப் போய்விடுகிறது. இப்போது 25% ஆவியாகிறது என்ற துல்லியமான தரவு கிடைத்துள்ளதால், நாளை எங்கே, எவ்வளவு சென்டிமீட்டர் மழை பெய்யும் என்பதை இன்னும் கச்சிதமாகக் கணிக்க முடியும்.உலகளாவிய காலநிலை மாற்றத்தால்இந்தியாவின் பருவமழைப் பொழிவு மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆய்வறிக்கை, இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப 'காலநிலை மாதிரிகளைமாற்றி அமைக்க உதவும். இதன் மூலம் அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இந்தியாவின் பருவமழை எப்படி மாறும் என்பதை உலக நாடுகளின் தரவை நம்பியிருக்காமல், நமது சொந்தத் தரவைக் கொண்டே கணிக்க முடியும்.

