2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெருமான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. புதிதாக தவெக ஆட்சி அமைத்த இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பட்டிமன்ற பேச்சாளர் தமிழக வெற்றி கழகம் ஆட்சி குறித்து அவர் பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆறு மாதங்கள் எந்த விமர்சனத்தையும் வைக்க மாட்டோம் என பிரதான எதிர்க்கட்சியான திமுக தெரிவித்துள்ளது. அதே நேரம் சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இதற்கிடையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவையும் மீது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.இந்நிலையில்மதுரையில் நூலகம் திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற , தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது புதிய முதல்வருடைய ஆட்சி எப்படி உள்ளது என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கொஞ்சம் காலம் போகட்டும் பார்ப்போம். இதுவரை நல்லா இல்லை என வெளிப்படையாக தவெக ஆட்சி குறித்து பேசியுள்ளார் சாலமன் பாப்பையா. அவருடைய இந்த பதில் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.தொடர்ந்து அவர், இதுவரை நல்லா இல்லை. ஒருவேளை பின்னாடி நல்லா இருந்தாலும் இருக்கலாம். எனவே பொறுத்திருந்து தான் பார்க்கனும் என்ற கருத்தினையும் சாலமன் பாப்பையா முன்வைத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் தேசிய கல்வி கொள்கை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ்நாட்டிற்கு அது நல்லதா, இல்லையா என கேட்கப்பட்டது. அதற்கு அவர், மும்மொழி கொள்கையை நான் அங்கீகரிக்க மாட்டேன். பல மொழிகள் படிக்கின்ற காரணத்தால் என்ன லாபம்.தற்போது இரண்டு மொழிகளை தெரிந்து கொள்கிறார்கள். இன்னொரு மொழி வேண்டும் என்றால் அது எப்போது தேவையோ அப்போது தெரிந்து கொள்வார்கள். மற்றபடி மூன்று மொழியை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேசிய கல்வி கொள்கை என்பது வேறொரு மொழியை திணிப்பதற்கான வழியாக எனக்கு தோன்றுகிறது. அதனால் நான் விரும்பவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார் சாலமன் பாப்பையா.இதனிடையில் தவெக ஆட்சி நீடிக்காது. அடுத்த ஆறு மாதங்களில் கவிழ்ந்து விடும் என திமுக, அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் பேசி வருகின்றனர். இதுவும் அரசியல் வட்டாரத்தில் பலவிதமான விவாதங்களை கிளப்பிய வண்ணம் உள்ளன. அதே நேரம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த ஆட்சியை கவிழ விட மாட்டோம். ஐந்து ஆண்டுகள் தவெக ஆட்சி நீடிக்கும் என கருத்துக்கள் தெரிவித்து கொண்டிருக்கின்றன.அதோடு தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 7 தொகுதிகளில் நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் கட்சியான தவெக அத்தனை இடங்களில் வெற்றி பெற வேண்டும் என முனைப்பு காட்டி கொண்டிருக்கின்றன. அதே நேரம் திமுக, அதிமுகவும் இடைத்தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. இதற்கிடையில் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

