கத்தார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் மரணம்
இது குறித்து அமீரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான அமீரி திவான் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் நமது நாட்டின் தந்தை என்று போற்றப்படும் மரியாதைக்குரிய இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் அவரது ஆன்மாவைச் சாந்தியடையச் செய்யட்டும். தனது தாயகத்திற்கும் நாட்டிற்கும் அவர் ஆற்றிய மகத்தான சாதனைகளுக்கான நற்பலன்களை அவருக்கு வழங்கட்டும்.அவரது மறைவால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்புக்கு ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரின் தந்தை அமீர்
கடந்த 1995 முதல் 2013 வரை கத்தாரின் அமீராக ஷேக் ஹமத் பதவி வகித்தார். இவர் பொறுப்பேற்ற போது கத்தார் ஒரு சாதாரண நாடாகவே இருந்தது. ஆனால் தனது அசாத்திய உழைப்பால் அந்த நாட்டை உலகின் மிக முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளமிக்க நாடாக மாற்றிக் காட்டினார். இவரது ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூகம், உள்கட்டமைப்பு மற்றும் கலாசாரம் என அனைத்துத் துறைகளிலும் கத்தார் அசுர வளர்ச்சி கண்டது.இவரது ஆகச்சிறந்த சாதனைகளில் ஒன்று, 1996-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சர்வதேச செய்தி நிறுவனம் ஆகும். இந்த ஒரே ஒரு ஊடகம் ஒட்டுமொத்த அரபு உலகின் குரலாக மாறி உலகையே உற்றுநோக்கச் செய்தது. 2004-ஆம் ஆண்டில் கத்தாரின் முதல் நிரந்தர அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். தொடர்ந்து நகராட்சித் தேர்தல்களை அறிமுகம் செய்து, வளைகுடா நாடுகளில் முதன்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியதோடு அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் வழிவகை செய்தார். இந்த புரட்சிகரமான மாற்றங்களால் தான் அவர் கத்தாரின் தந்தை என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
பதவியைத் தாமாகவே முன்வந்து துறந்தவர்
கடந்த 2013-ஆம் ஆண்டில், ஷேக் ஹமத் தனது பதவியைத் தாமாகவே முன்வந்து துறந்து தனது 33 வயது மகனான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போதைய அமீராக ஷேக் தமீம் தான் கத்தாரை வழிநடத்தி வருகிறார்.இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது மற்றும் நெருக்கமானது. இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை விநியோகிப்பதில் கத்தார் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே இன்று இருக்கும் இந்த இணக்கமான நட்புறவுக்கு வித்திட்டவர்களில் மறைந்த ஷேக் ஹமத் மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் நட்பு நாடான கத்தார் வெறும் 25 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடாகும். ஆனால், கச்சா எண்ணென்னை எரிவாயுவை (LNG) உலகிலேயே மிக அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாகவும், உலகளாவிய முதலீட்டு சக்தியாகவும், மத்திய கிழக்கு நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நாடாகவும் கத்தார் திகழ்வதற்கு இவரது தொலைநோக்குப் பார்வையே முக்கியக் காரணமாகும்.

