இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், முதல் போட்டி, வரும் ஜூலை 14ஆம் தேதி, இந்திய நேரப்படி, மாலை 3:30 மணிக்கு துவங்கவுள்ளது. இப்போட்டிக்கான எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.ஓபனர்கள் இடங்களில் வழக்கம்போல கேப்டன் ஷுப்மன் கில், ரோஹித் சர்மா ஆகியோர் இருப்பார்கள். சமீபத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றிருந்தது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், கேப்டன் கில் வெற்றிகளை பெற்றுக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.மற்றொரு ஓபனர் இடத்தில், ரோஹித் சர்மா, தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். காரணம், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரோஹித்துக்கு மாற்றாக களமிறங்க தயார் நிலையில் இருக்கிறார். இதனால், ரோஹித் சர்மா, ஒவ்வொரு தொடரிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது.மிடில் வரிசை: கடந்த சில வருடங்களாகவே இந்திய அணி மிடில் வரிசையில், மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே. எல். ராகுல் ஆகியோர்தான் மிடில் வரிசையில் இருக்கிறார்கள். ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் வரை, இந்த மிடில் வரிசையில் மாற்றம் இருக்காது எனக் ருதப்படுகிறது.வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அவதிப்படுவதால், ஷிவம் துபேவுக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்க உள்ளது. துபே, அபாரமாக செயல்பட்டு, ஹர்திக்கிற்கு நிகராக தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடம், அக்சர் படேலுக்கு வழங்கப்படும்.முழுநேர சுழற்பந்து வீச்சாளர் இடத்தில், குல்தீப் யாதவ் விளையாட உள்ளார். இவர், இந்த மூன்று போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அதிக விக்கெட்களை எடுத்துக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும். நீண்ட ஓய்விற்கு பிறகு, ஜஸ்பரீத் பும்ரா விளையாட உள்ளார். இதனால், அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ஐபிஎல் 2026 சீசனில், பும்ரா பந்துகளை பேட்டர்கள் சிறப்பாக எதிர்கொண்டனர். இதனால், இங்கிலாந்து பேட்டர்களுக்கு எதிராக, பும்ரா எபடி பந்துவீசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், அவ்வபோது ஒயிட்களை வீசி வந்த அர்ஷ்தீப் சிங், ஒருநாள் தொடரில் ஒயிட்களை குறைத்து, ரன்களையும் சிக்கனமாக விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஒருபக்கம் பும்ரா பந்துவீசுவதால், மறுபக்கம் அர்ஷ்தீப் சிங்கை அட்டாக் செய்து ஆட முயற்சிப்பார்கள்.இதனால், அர்ஷ்தீப் சிங் அழுத்தங்கள் இல்லாமல் பந்துவீசியாக வேண்டும். சமீபத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 3 போட்டிகளில் 7 விக்கெட்களை எடுத்த குர்நூர் பிராரும் பிளேயிங் 11-ல் விளையாட அதிக வாய்ப்புள்ளது.இந்திய உத்தேச 11 அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே. எல். ராகுல், ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குர்நூர் பிரார்.

