52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
பிஎஃப் தொகையை ஈசியா மாற்றலாம்: இந்த இரண்டு வழிகளை நீங்கள் யூஸ் பண்ணலாம்

ஒரு நிறுவனத்தில் இருந்து வேலை மாறிய பிறகு பழைய நிறுவனத்திடமிருந்து தற்போதைய கணக்கிற்கு PF கணக்கு இருப்பை மாற்ற சம்பளம் பெறும் ஊழியர்கள் இப்போது இரண்டு முறைகளைப் பயன்படுத்தலாம். இந்த புதிய வசதியானது வருங்கால வைப்பு நிதி இருப்பு பரிமாற்ற செயல்முறையை எளிதாக்குவதையும், காகிதப் பணிகளைக் குறைப்பதையும், ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பை தாமதமின்றி ஒருங்கிணைக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உறுப்பினர் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் மேம்படுத்தல் பணிகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளால் இணையதளம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் செயல்படாமல் இருந்தது. உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான ஓய்வூதிய நிதி அமைப்பின் ஆன்லைன் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது பலமுறை தாமதமானது. சேவைகள் தற்போது செயல்பாட்டில் இருந்தாலும், PF கோரிக்கைகள் மற்றும் பிற சேவை கோரிக்கைகளைச் செயல்படுத்துவதில் சில தாமதங்கள் ஏற்படலாம் என்று EPFO தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

PF இருப்பை மாற்றுவதற்கான வழிகள்!

சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் PF இருப்புத் தொகையை மாற்றுவதற்கான கோரிக்கையை இரண்டு வழிகளில் ஒன்றின் மூலம் தொடங்கலாம். முதலில் அவர்கள் தங்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணைப் (UAN) பயன்படுத்தி EPFO உறுப்பினர் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.'கணக்கு பரிமாற்றத்திற்கான கோரிக்கை' (Request for Transfer of Account) பிரிவு: இந்த விருப்பம் EPFO உறுப்பினர் இணையதளத்தின் 'ஆன்லைன் சேவைகள்' (Online Services) ஆப்சனில் உள்ளது. இதன் மூலம் நீங்கள் பரிமாற்ற செயல்முறையை எளிதாகத் தொடங்கலாம்.'உறுப்பினர் சேவை வரலாறு' (Member Service History) பிரிவு: EPFO 3.0 திட்டத்தின் கீழ், உறுப்பினர்கள் இணையதளத்தில் உள்ள “Member Service History” ஆப்சன் மூலம் தங்கள் முந்தைய மற்றும் தற்போதைய வேலை விவரங்களைப் பார்க்கலாம். இந்தப் பிரிவு நிலுவையில் உள்ள PF பரிமாற்றக் கோரிக்கைகளையும் காட்டுகிறது. கோரிக்கை ஏதுமில்லை என்றால் நிலையை “no” (இல்லை) என்று காட்டும். மேலும், “Claim” இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் படிவம் 13 (Form 13) வழியாக “சேவை பரிமாற்றக் கோரிக்கையை” (Service Transfer Claim) தாக்கல் செய்வதற்கான விருப்பத்தையும் இது வழங்குகிறது. உங்கள் UAN தெரியவில்லை என்றால், உங்கள் சமீபத்திய சம்பளச் சீட்டில் அந்த எண்ணைச் சரிபார்க்கலாம். அல்லது உங்கள் நிறுவனத்திடம் அதைக் கேட்டுப் பெறலாம்.

பரிமாற்றத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • நீங்கள் எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தாலும் 'ஆன்லைன் சேவை/பரிமாற்றக் கோரிக்கை' (Online Service/Transfer Request) பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி பழைய கணக்கிலிருந்து தற்போதைய கணக்கிற்கு மாற்ற விண்ணப்பிக்கலாம்.
  • முதலில், உங்கள் முந்தைய நிறுவனத்தின் உறுப்பினர் அடையாள எண் (Member ID) மற்றும் பிற தேவையான விவரங்களை உள்ளிட்டு, 'Get Details' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • கோரிக்கையைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்க, உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும்.
  • எங்கு மாற்றப்பட வேண்டுமோ, அந்தத் தற்போதைய நிறுவனத்தின் விவரங்களை EPFO உறுப்பினர் இணையதளம் வழங்கும். அவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
  • சமர்ப்பித்த பிறகு, EPFO மாற்றும் செயல்முறையை மேற்கொண்டு, இருப்புத் தொகையை உங்கள் தற்போதைய PF கணக்கிற்கு மாற்றும்.

பிஎஃப் திட்டத்தின் நன்மைகள்!

PF என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசு சேமிப்புத் திட்டமாகும். EPFO அமைப்பால் நிர்வகிக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், ஊழியர் மற்றும் பணியமர்த்தும் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும், ஊழியரின் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீதத்தை PF கணக்குக்கு பங்களிப்பாகச் செலுத்துகின்றனர். இந்தப் பங்களிப்பு இரு தரப்பினருக்கும் தலா ரூ. 1,800 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் விரும்பினால் இத்திட்டத்தில் கூடுதல் தொகையைச் செலுத்தலாம்.2025-26 நிதியாண்டுக்கான PF வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.25 சதவீதமாக இருக்கிறது. அரசு இந்த விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் மறுஆய்வு செய்கிறது. PF கணக்கின் இறுதி இருப்புத் தொகையின் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடுகிறது. ஆனால், வட்டித் தொகையானது நிதியாண்டின் இறுதியில் ஆண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *