52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
ஆதவ் அர்ஜுனா அரசியல் வரலாறு தெரியுமா? பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – கே.பி. முனுசாமி பதிலடி

அதிமுகவில் இருந்து பலரும் தொடர்ச்சியாக வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் . இந்த சவாலான காலக்கட்டத்தில் இருந்து அதிமுக எப்படி மீண்டு வரப்போகிறது என்பது அரசியல் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து பலரும் விலகி வருவது குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு கட்சி பொறுப்புகள் வழங்கி அரவணைத்து கொண்டிருக்கிறது. முக்கியமாக அதிமுகவில் இருந்து பலரும் தவெக நோக்கி வரும் நிலையில், அதிமுக தங்களுக்கு தாய் கட்சி எனவும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியிருந்தார். இது அதிமுகவினரையே கடுமையாக கோபம் அடைய செய்தது.இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, ஆதவ் அர்ஜுனா பற்றியும் அதிமுகவினர் தவெகவில் இணைவது குறித்தும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தொடர்ந்து அதிமுகவில் இருந்து பலரும் தவெகவுக்கு போவதை எப்படி புரிந்து கொள்வது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தொடர்ந்து யாரும் போகவில்லை. பலன் அடைந்தவர்கள். இந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது சுகம் அடைந்தவர்கள். அந்த சுகத்தை தேடி ஆட்சி உள்ள காரணத்தால் அங்கே செல்கிறார்கள். அதே தவெக ஆட்சியில் இல்லையென்றால் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சுகபோகிகள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். கழகத்தின் மீது பற்று கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள் இங்கு தான் உள்ளார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். அதன்பின்னர் அதிமுகவை உடைக்கும் வேலைகளில் தவெக ஈடுபடுகிறது என்பது குறித்து விஜய் அதிமுகவை அழிக்க நினைக்கிறாரா? இங்கிருந்து வர்ற எல்லாரையும் அணைத்து கொள்கிறார்களே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அதிமுகவை அழிப்பதற்கு யாராலும் முடியாது. தன்னலம் இல்லாமல் உருவான கட்சி. தோல்வி சமயத்தில் கட்சி தொய்வடையும். ஆனாலும் மீண்டு வந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் கே.பி. முனுசாமி. இதனிடையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்தும் அவர் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.அதாவது உள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஒரு ஓட்டு கூட அதிகமாக வாங்காது என பேசியிருந்தார். அவருடைய இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த கே.பி. முனுசாமி, அவருடைய அரசியல் வரலாறு உங்களுக்கு தெரியுமா? எந்தெந்த கட்சியில் இருந்து வந்துள்ளார் தெரியுமா? அப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஆதவ் அர்ஜுனா அதிமுக மீது வைத்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் கே.பி. முனுசாமி.இதனிடையில் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு அரசின் தவறுகளை உடனுக்குடன் இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாக கொண்டு சேர்க்க வேண்டும். எந்த ரீல்ஸ் மூலமாக தவெக வெற்றி பெற்றதோ, நாமும் அதன் மூலமே வெற்றி பெறுவோம். தவெகவின் வெற்றி நிலையாக இருக்காது. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம் வெவவோம் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *