10,000 மக்கள் பாதிப்பு
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, மாவட்டத்தில் கட்டிட அனுமதி கிடைக்காமல் 10,000 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் சில விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு ஒரு முறைபடுத்தி அந்த கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
உதகை மட்டும் மார்க்கெட் கட்டுமான பணிகளை வியாபாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டப்படி தற்போது ஏழு மீட்டர் மட்டுமே கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.மற்ற மலை மாவட்டங்களில் மற்றும் மாநிலங்களில் 10 மீட்டர் வரை கட்டிடங்கள் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் 10 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் கட்ட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.கூடலூர் மைசூர் இடையே ரயில் சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கூடலூரில் இருந்து நஞ்சன்கூடு வரை ரயில் பாதை அமைக்க வேண்டும்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களுக்கு பல மடங்கு விலை உயர்த்தப்பட்டதால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சிறிய கடைகள் மூடப்பட்டு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும்.
டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும்
டீசல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்ந்து உள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். மேலும் அனைத்து டோல்கேட்களில் கொரோனா காலம் போல வாகனங்களுக்கு விதிவிலக்கு அளித்து கட்டணங்கள் பெறக் கூடாது.
ஆளுங்கட்சியினர் மாமூல் பெறுவதாக புகார்
கல்லட்டி மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். சில இடங்களில் ஆளுங்கட்சியினர் மாமூல் பெறுவதாக புகார்கள் உள்ளன. இது போன்ற புகார்கள் வந்தால் உடனடியாக அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தால் எந்த விசாரணையும் இல்லாமல் உடனடியாக எப்ஐஆர். , போடப்படுகிறது. முறையாக விசாரணை மேற்கொண்ட பின்னரே எப்ஐஆர் போட வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

