52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அதிமுக வை அழிக்க த. வெ. க வின் கைக்கூலியாக செயல்படுகிறார் சி. வி சண்முகம் – பசுபதி குற்றச்சாட்டு

விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது சி. வி. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, த. வெ. க அரசு கடன் தள்ளுபடி அறிவித்தது, விவசாயிகளை ஏமாற்று வேலை ஆகும். சுமார் 15,500 கோடி விவசாய கடனில் தற்போது சுமார் 2500 கோடி தான் கடன் தள்ளுப்படி செய்துள்ளது.

அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல்

இன்று செய்தியாளர்களை சந்தித்த சி. வி. சண்முகம் த. வெ. க தூண்டுதலின் பேரில் மீது கேவலமாக பேசுகிறார். பாமக போட்ட பிச்சை என்று கூறுபவர் 2016 ஆம் ஆண்டு பாமக கூட்டணியில் தான் விழுப்புரத்தில் சி. வி. சண்முகம் பேசுவது கண்டிக்கதக்கது. தான் சார்ந்து இருக்கிற கட்சியை கேவலப்படுத்துகிறார்.பொதுச்செயலாளர் பற்றி பேசுகிறார். சி. வி. சண்முகம் தான் அவரின் அண்ணனை வைத்து குடும்ப அரசியலை செய்தவர் . அவர் சிகரட்டை ஊதி முகத்தில் விட்டவர் தான் சி. வி. சண்முகம் அண்ணன் ஆவார். இவர் தான் குடும்ப அரசியலை செய்தவர். இவர் போய் பொதுச்செயலாளர் மீது குற்றம் சாட்டுவார். சொந்த கட்சியினரையே தோற்கடித்தவர் தான் சி. வி. சண்முகம்.

அதிமுகவை உடைக்க த. வெ. க. வின் கைக்கூலியா?

நீங்கள் சொன்னர்வர்களுக்கு தான் சீட்டு கொடுத்தார் பொதுச்செயலாளர். க்கு காரணம் மாவட்டத்தில் கோலோச்சியுள்ள சி. வி. சண்முகம் போன்றவர்கள் தான். கட்சியை உடைக்க சி. வி. சண்முகம் நினைக்கிறார். அதற்கு முழுக்க முழுக்க காரணம் த. வெ. க தான் விஜய் வந்தார். பலகோடி ரூபாய் சோபா வந்தது, அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.த. வெ. க வில் இவர்களை தற்போது மதிக்கவில்லை என்பதால் மீண்டும் அதிமுக வில் வருகிறேன்.அதே பொறுப்பு கொடுங்க என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம். இன்று அதிமுகவினர், த. வெ. க விற்கு போவதற்கு காரணம் சி. வி. சண்முகம் தான். இவர் த. வெ. க வின் கைக்கூலியாக செயல்படுகிறார். அதிமுகவிலிருந்துக்கொண்டே, அதிமுக வை அழிக்கிறார் இதான் உண்மை. அது ஒரு போது நிறைவேறாது என்றார். முன்னதாக,திண்டிவனத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம், கட்சியின் தற்போதைய தலைமையை கடுமையாக விமர்சித்தார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்ததாகவும், இது வெறும் தோல்வி அல்ல, மக்கள் மத்தியில் கட்சி புறக்கணிக்கப்பட்டதற்கான அறிகுறி என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் கட்சியின் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைந்து வருவதாக குற்றம்சாட்டினார்.

சி. வி. சண்முகம் மீது பசுபதி கடும் தாக்கு

தோல்விக்கான காரணங்களை ஆராயாமல், தலைமை தனது தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், சிலரின் ஆலோசனைகளையே கேட்டு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதிமுக என்பது குடும்ப அரசியல் கட்சி அல்ல, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் மகனை அரசியலுக்கு கொண்டு வருவது குறித்து பேசப்படுவது தேவையற்ற நாடகம் என்றும் விமர்சித்தார்.கட்சியில் ஜனநாயக முறையில் கருத்துகளை கேட்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும், உடனடியாக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை கூட்டி தோல்விக்கான காரணங்களை விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஜெயலலிதா போல் தோல்விக்கான பொறுப்பை தலைமை ஏற்க வேண்டும் என்றும், அனைவரையும் அரவணைத்து சென்றால் மட்டுமே அதிமுக மீண்டும் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியும் என்றும் சி. வி. சண்முகம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *