52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
‘மாட்டிகினாரு ஒருத்தரு’ – பிட்னஸ் இல்லாத வீரரை டீமில் சேர்த்த கம்பீர்: கண்டுபிடித்து, திட்டிதீர்த்த பிசிசிஐ

இந்திய அணியில் தற்போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு எதிராக சீனியர் வீரர்கள் திரும்பியுள்ளனர்.அணியில், தனக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டும் கம்பீர் முன்னுரிமை கொடுத்து வருவதை கண்டு பொங்கியிருக்கும் சீனியர் வீரர்கள், கம்பீருக்கு எதிராக செயல்பட முடிவு செய்து, பிசிசிஐயில் இருக்கும் சீனியர் வீரர்களை கைக்குள் போட்டு, வேலையை காட்ட ஆரம்பித்துள்ளனர்.சமீப காலமாகவே, இந்திய அணியில் காயம் காரணமாக விலகும் வீரர்கள் மீண்டும் பிட்னஸை நிரூபித்தால் மட்டுமே இடம் வழங்கப்படுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஒருநாள் பார்மெட்டில் மட்டும் ஆடுவதால், உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. ஒருவேளை, வீரர்களின் பிட்னஸ் மீது சந்தேகம் எழுந்தால், உடனே அவர்களை பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு அனுப்பி பிட்னஸை நிரூபிக்க வைக்கிறார்கள்.அப்படிதான், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்புகூட ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா ஆகியோரை பிட்னஸை நிரூபிக்க சொல்லி, பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அவர்களும் பிட்னஸை நிரூபித்து, பிறகுதான் அணியில் சேர்ந்தனர்.மாட்டிக் கொண்ட கம்பீர்: இந்நிலையில், ஹர்ஷித் ராணா இன்னமும் பிட்னஸை நிரூபிக்காமல் இருக்கும் நிலையில், அவருக்கு மட்டும் எப்படி அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களில் வாய்ப்பு வழங்கப்பட்டது என தற்போது பிசிசிஐ சீனியர் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளார்களாம்.ஹர்ஷித் ராணா, ஜூன் 17ஆம் தேதிதான் பிட்னஸை முழுமையாக நிரூபிக்க முடியும் என பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமி, பிசிசிஐக்கு அறிக்கை கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரிடம் பேசிய பிசிசிஐ நிர்வாகிகள், ‘‘பிட்னஸை நிரூபிக்காத வீரரை எப்படி அணியில் சேர்த்தீர்கள்? அவர் இன்னமும் பிட்னஸை நிரூபிக்கவில்லை என்பதை ஏன் கூறவே இல்லை’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.இதற்கு பதில் அளித்த அகார்கர், ‘‘அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்குள் ஹர்ஷித் ராணாவால் முழுமையாக பிட்னஸை நிரூபிக்க முடியும் என பிசிசிஐ மருத்துவர்கள் தெரிவித்தார்கள். மேலும், கம்பீரும் சேர்க்க சொல்லிவிட்டார். இதனால்தான், ராணாவை சேர்த்தேன்’’ என பிசிசிஐயிடம் அகார்கர் ஓபனாக தெரிவித்துவிட்டாராம்.பிசிசிஐ கடும் அதிருப்தி: இதனைத் தொடர்ந்து கம்பீரை அழைத்த பிசிசிஐ, யாரை கேட்டு பிட்னஸ் இல்லாத வீரரை அணியில் சேர்க்க பரிந்துரை செய்தீ்ர்கள். அனைத்து வீரர்களுக்கும் ஒரே விதிமுறை தானே. அப்படியிருக்கும்போது ராணாவுக்கு மட்டும் ஏன் சலுகை காட்டுகிறீர்கள்? அவர்களது டி20 எகனாமி மோசமாக இருக்கும் நிலையில், அவர் பிட்னஸையும் நிரூபிக்கவில்லை. பார்மையும் நிரூபிக்கவில்லை. அப்படியிருக்கும்போது நேரடியாக எப்படி அணியில் சேர்த்தீர்கள் என கம்பீர் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாம்.அதுமட்டுமல்ல, இனி இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களது பிட்னஸ் எப்படி இருக்கு, அவர்களது பார்ம் எப்படி இருக்கு என்பதை இனி பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்து, ஒப்புதலை பெற வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாம்.அதுமட்டுமல்ல, பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் இருக்கும் ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறதா என்பதை ஆராய, பிசிசிஐ சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாம். இவர்கள், நேரடியாக பிசிசிஐ நிர்வாகிகளுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *