52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
அமெரிக்கா – ஈரான் போரை நிறுத்த ஒப்பந்தம்: மௌனம் காக்கும் நெதன்யாகு -இஸ்ரேலின் அடுத்த நகர்வு என்ன?

கடந்த பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

ஈரான் மீது இஸ்ரேல் , அமெரிக்கா கூட்டுத்தாக்குதல்

அதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கியதுடன், ஹோர்முஸ் நீரிணையையும் மூடியது. பின்னர் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், மீண்டும் மோதல் வெடித்தது. பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே போரை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா மற்றும்களுக்குப் பிறகு, இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (Framework Agreement) உடன்பாடு எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் ஜூன் 19-ஆம் தேதி ஜெனீவாவில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.இந்த ஒப்பந்தம் குறித்து தகவல்கள் வெளியானதிலிருந்து, வளைகுடா நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, எதிர்காலத்தில் அமைதி நிலவும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த மோதலின் முக்கிய மையமாக கருதப்படும் இஸ்ரேல் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்

இஸ்ரேல் பிரதமர் , ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் (X) சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அவரது 80-வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி மட்டுமே வெளியிட்டார். அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் அல்லது லெபனானில் நடைபெற்று வரும் மோதல் குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையில், நெதன்யாகுவின் அரசில் உள்ள சில அமைச்சர்கள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் இஸ்ரேலுக்கும், சுதந்திர உலகத்திற்கும் பாதகமானது என்றும், இது பாதுகாப்பை உறுதி செய்யாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் என்ன முடிவு எடுக்கிறது?

மேலும், அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் (Refueling Aircraft) இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து இருப்பதால், சுமார் 24 லட்சம் விமான டிக்கெட்டுகள் பாதிக்கப்படக்கூடும் என்று கடந்த மாதம் இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியாகத் தொடங்கியதும், போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகேவ் அந்த விமானங்களை வெளியேற்றுமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், இந்த ஒப்பந்தம் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்தார். “டிரம்பின் ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது. நாங்கள் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லை. இது எங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்காது. ஹிஸ்புல்லா அமைப்பு முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். எங்கள் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்கக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.இஸ்ரேல் அமைச்சர்களின் இந்த கருத்துக்கள், டிரம்ப் ஆதரிக்கும் அமைதி முயற்சிக்கு எதிராக இஸ்ரேல் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை காட்டுகின்றன. லெபனானில் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் மற்றும் தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் பலன் அளிக்காது எனவும், ஹிஸ்புல்லாவை தனியாக விடமாட்டோம் என்று ஈரான் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *