52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
மாத சம்பளம் 30,000 ரூபாய் தான்; அதை வைத்து எப்படி குடும்பத்தை ஓட்டுவது?

இன்றைய காலகட்டத்தில் நாம் எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் அது செலவுகளுக்கே போதுமானதாக இல்லை என்பதே பலரின் கவலையாக இருக்கிறது. செலவுகளையே சமாளிக்க முடியாத சூழல் இருக்கும்போது எப்படி சேமித்து வைக்க முடியும் என்ற கேள்வியும் பரவலாக இருக்கிறது. ஆனால் சரியான திட்டமிடல் இருந்தால் அது சாத்தியாகும். நம்முடைய மாதச் சம்பளத்தில் குடும்பச் செலவுகளையும் சமாளித்து, அதே நேரத்தில் எதிர்காலத்திற்காகச் சேமிப்பது வைப்பது என்பது உண்மையில் ஒரு கலை.முறையான திட்டமிடல் மற்றும் ஒழுக்கமான பணப் பழக்கவழக்கங்கள் இருந்தால் மாத சம்பளத்தை வைத்துக் கொண்டே ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். உங்களுடைய மாத சம்பளம் 30,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அதன் மூலம் உங்கள் பட்ஜெட்டைத் திட்டமிட்டு, பணத்தை நிர்வகிக்க உதவும் ஒரு எளிய வழிகாட்டியை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.நிதி ஆலோசகர்கள் பொதுவாகப் பரிந்துரைக்கும் 50:30:20 விதியை நம்முடைய மாத சம்பளம் 30,000 ரூபாய்க்கு ஏற்ப நாம் திட்டமிடலாம்.

அத்தியாவசியத் தேவைகள் (50% = ரூ. 15,000)!

நாம் உயிர்வாழவும், அன்றாட வாழ்க்கையை நடத்தவும் கண்டிப்பாகத் தேவைப்படும் இதில் அடங்கும்.வீட்டு வாடகை & மின்சாரம்: ரூ. 6,000 - ரூ. 7,000மளிகை & காய்கறி: ரூ. 4,000 - ரூ. 5,000பால், சிலிண்டர் & தண்ணீர்: ரூ. 2,000போக்குவரத்து (பெட்ரோல், பஸ் டிக்கெட்): ரூ. 1,500

அவசரச் செலவுகள் (30% = ரூ. 9,000)!

கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்க்கை முறைக்கான செலவுகள் இதில் அடங்கும்.குழந்தைகளின் கல்வி (மாதாந்திரப் பங்கு): ரூ. 3,000மொபைல், இன்டர்நெட், டிவி ரீசார்ஜ்: ரூ. 1,000மருத்துவச் செலவுகள்: ரூ. 1,500ஆடை, பண்டிகை மற்றும் சுபகாரியங்கள்: ரூ. 2,000சுய விருப்ப செலவுகள் (வெளி உணவு, பொழுதுபோக்கு): ரூ. 1,500

சேமிப்பு மற்றும் முதலீடு (20% = ரூ. 6,000)!

சம்பளம் வந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது இந்தச் சேமிப்புதான்.அவசரகால நிதி: ரூ. 2,000 எதிர்கால முதலீடு (RD / PPF / Mutual Fund): ரூ. 4,000

பணத்தை மிச்சப்படுத்தவும் நிர்வகிக்கவும் சில முக்கியக் குறிப்புகள்!

சம்பளம் வந்தவுடன் முதலில் சேமிப்பிற்கான 6,000 ரூபாய் தொகையைத் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். அதன் பிறகு மீதமுள்ள 24,000 ரூபாய்க்குள் செலவுகளைத் திட்டமிட வேண்டும். சம்பளம் - சேமிப்பு = செலவு, என்பதே சரியான சூத்திரம் ஆகும்.

வரவு - செலவுக் கணக்கு எழுத வேண்டும்!

ஒரு சிறிய டைரியிலோ அல்லது மொபைல் செயலியிலோ தினமும் நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். இது தேவையில்லாத செலவுகள் எங்கே நடக்கிறது என்பதை உங்களுக்குக் காட்டும்.

மளிகைப் பொருட்களைப் பட்டியலிட வேண்டும்!

சூப்பர் மார்க்கெட்டுகளுக்குச் செல்லும்போது தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க, வீட்டிலேயே ஒரு தெளிவான பட்டியல் தயாரித்துச் செல்ல வேண்டும். ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களைச் சரியாகப் பயன்படுத்துவது பட்ஜெட்டைப் பெருமளவு குறைக்கும்.

அவசரகால நிதி முக்கியம்!

திடீரென வரும் மருத்துவச் செலவுகள் அல்லது எதிர்பாராத வேலை இழப்புகளைச் சமாளிக்க, குறைந்தது 3 முதல் 6 மாதச் சம்பளத் தொகையை (ரூ. 90,000 முதல் ரூ. 1,800,000) ஒரு தனிக் கணக்கில் சேர்த்து வைக்க வேண்டும்.

கடன் வலையில் விழக் கூடாது!

கிரெடிட் கார்டு மற்றும் உடனுக்குடன் கிடைக்கும் ஆன்லைன் செயலிக் கடன்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அவசியமில்லாத ஆடம்பரப் பொருட்களுக்காகக் கடன் வாங்குவது உங்கள் மாதாந்திர பட்ஜெட்டைச் சீர்குலைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நினைத்தால் சாதிக்க முடியும்!

மாத சம்பளம் 30,000 ரூபாய் என்பது இன்றைய விலைவாசி உயர்வில் நெருக்கடியாகத்தான் இருக்கும். ஆனால், ஆடம்பரத்தை விடுத்து அவசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், கடனில்லாத நிம்மதியான வாழ்க்கையையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான சேமிப்பையும் உங்களால் நிச்சயம் உருவாக்க முடியும். சரியான திட்டமிடலும் நிதி ஒழுக்கமும் இருந்தாலே போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *