52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
தவெகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்: ஒரே வார்த்தையில் அமைச்சர் வன்னி அரசு அளித்த பதில்

அதிமுகவில் அதிருப்தியில் இருந்த விராலிமலை சட்டமன்ற தொகுதி , விரைவில் தவெகவில் இணைவார் என சமீப காலமாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதனையடுத்து அவருடைய முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்தது கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று தனது எம்எல்ஏ பதவியை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதோடு உடனடியாக தமிழக வெற்றி கழகத்திலும் தங்களை இணைத்து கொண்டனர். இதனிடையில் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் நான்கு எம்எல்ஏக்களிடமும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார்.இந்நிலையில் தற்போது விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களுடன் விரைவிலே அவர் தவெகவில் தன்னை இணைத்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் , தவெகவில் விஜயபாஸ்கர் இணைவது குறித்து பேசியுள்ளார்.அதாவது இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜயபாஸ்கர் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் தமிழக வெற்றி கழகத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள். அவர் மீது குட்கா வழக்கு கூட உள்ளது. அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். விஜயபாஸ்கர் தவெகவில் இணையும் பட்சத்தில் உங்களுடைய பதில் என்னவாக இருக்கு என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, எனக்கு தெரியலைங்களே.நீங்க சொன்னதால எனக்கே தெரியும் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார் வன்னி அரசு. தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் வன்னி அரசு இடம்பெற்றுள்ள நிலையில், தவெகவில் விஜயபாஸ்கர் இணைவது குறித்து தனக்கே தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார் வன்னி அரசு. அதாவது கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்நிலையில் , பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் வன்னி அரசு. இதற்கிடையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவதால் அதிமுகவின் பலம் குறைந்து வருகிறது.ஏற்கனவே நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், தற்போது விஜயபாஸ்கருடன் சேர்த்து மொத்தமாக 5 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதன் காரணமாக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலர் 42 ஆக குறைந்துள்ளது. அதோடு தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *