52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
சமூக நீதித்துறை போதாதா? முக்கிய அமைச்சகத்தை குறிவைக்கும் விசிக – அதிருப்தியில் தவெக தலைமை

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 107 இடங்களை பிடித்து தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் தனிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்தியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

தவெக அமைச்சரவையில் விசிக

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னி அரசுக்கு சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டது. தற்போது சமூக நீதித்துறைக்கு பதில் வேறு துறையை ஒதுக்கும் படி வலியுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது குறித்து மூத்த நிர்வாகி ஒரு சிலரிடம் கேட்டபோது, கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல்வராக விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டன பின்னல் மே 23ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு பெற விஜய் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் அமைச்சரவையில் சேர்க்க பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எந்த துறை வேண்டுமானாலும் பழகுவதாக தரப்பிலிருந்து கூறப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் வன்னி அரசு அமைச்சராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் பதவி வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். பின்னர் திருமாவளவனிடம் முதலமைச்சர் விஜய் நேரடியாக பேசி அமைச்சரவையில் சேர சம்மதிக்க வைத்ததாக கூறினார்.

வன்னியரசு சமூக நீதித்துறை

ஆனால் அமைச்சரவையில் எந்த துறையை பெறுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் ஒரு மாத காலம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த திருமாவளவன் சென்று விட்டார். இதனால் வன்னியரசுக்கு சமூக நீதித்துறையை ஒதுக்கி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் இடம் பிடித்த நிலையில் அதிகாரிகள் இடமாற்று முதல் அனைத்திலும் திருமாவளவன் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றுபடுகின்றன. இதன் கரணமாக சிறிய துறையை கையில் வைத்திருக்கும் போதே இவ்வளவு பவர் கிடைத்திருக்கிறது என்றால், பெரிய துறை கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆசை திருமாவளவருக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது ,எனது போக்குவரத்து துறை அல்லது உயர்கல்வி போன்ற துறையை கொடுங்கள் என தமிழக வெற்றி கழகத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் இருந்து கேட்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முக்கிய அமைச்சகத்தை குறிவைக்கும் விசிக

அமைச்சர் பதவி வேண்டாம் என தெளிவாக திருமாவளவன் கூறி இருந்த நிலையில் ,விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தற்போது பெரிய துறையை கேட்பதாக அவர் கூறியுள்ளார். இதனை கேட்டு தமிழக வெற்றி கழகம் தலைமை மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.எனினும், இதுவரை தமிழக வெற்றிக் கழகமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. எனவே, இவை அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களாகவே கருதப்படுகின்றன. எதிர்கால அமைச்சரவை மாற்றம் அல்லது கூட்டணி ஆலோசனைகளின் போது இந்த விவகாரம் எந்த திசையில் செல்கிறது என்பதே அரசியல் வட்டாரங்களில் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *