
சட்டமன்றம் இன்று கூடிய நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினார்கள். அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்தப்பட்டது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் துவங்கிய நிலையில் நேரலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பல விதமான விவாதங்களை கிளப்பியுள்ளது. நேற்றைய தினம் தவெகவின் அமைச்சர் ராஜ்மோகன், சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். அதோடு முதல்வர் பலமுறை இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் எனவும் கூறியிருந்தார். இப்படியான நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதம் தொடங்கப்பட்டவுடன் நேரலை நிறுத்தப்பட்டு இருப்பது பல விதமான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.இது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் யூடிப்பரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, சட்டமன்ற நேரலை நிறுத்தப்பட்டு விட்டது. விஜய் அவர்களுடைய உண்மை முகத்தை சட்டமன்றத்தில் உடைத்து விடுவார்கள் என்ற பயத்தில் தவெக அரசு நேரலையை நிறுத்தியுள்ளது.விஜய்க்கு எதுவுமே தெரியாது. நிர்வாக திறமையே இல்லாத ஒருவர் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள் என்ற பயமே நேரலையை நிறுத்த காரணம் என்ற விமர்சனங்களை தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார் மாரிதாஸ். மேலும், நீ தைரியமான ஆளு தானே தொடர்ந்து நேரலையை ஒளிபரப்பு மேன். ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் துவங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்பது கீழ்த்தரமான செயல். இதில் முழுமையாக நேரலை இருக்கும் என்று வாக்குறுதி வேறு என அடுக்கடுக்கான விமர்சனங்களை தன்னுடைய பதிவில் முன்வைத்துள்ளார் மாரிதாஸ். அவருடைய இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்க, பால விதமான கமெண்ட்களும் மாரிதாஸின் பதிவுக்கு வந்துள்ளது. அதோடு சட்டமன்ற நேரலை நிறுத்தப்பட்டது ஏன் என்ற கேள்வியையும் பலரும் முன்வைத்து கொண்டிருக்கின்றனர். இதனிடையில் திமுக, அதிமுக ஐடி விங் சமூக வலைத்தள பக்கங்களிலும் இது சம்பந்தமாக பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.இது சம்பந்தமாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் ஆளுநர் உரை மீதான விவாதம் துவங்கிய நிலையில் சட்டப்பேரவையில் நேரலை நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மீது அவ்ளோ பயமா டம்மி முதல்வரே என சராமாரியாக கேள்வியை முன்வைத்துள்ளது. இந்த பதிவிற்கு தவெகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.இதனிடையில் சட்டப்பேரவையில் இயக்குனர் அட்லீ குறித்து பேசப்பட்டு இருப்பது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதாவது சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ சிவசங்கர் பேசும்போது, ஆளுநர் உரை திமுகவின் சாதனைகளை வெட்டி ஒட்டி உள்ளது. முதல்வருக்கு நெருக்கமாக உள்ள அட்லீ வெட்டி, ஒட்டி படத்தை எடுப்பார். அதுபோன்று ஆளுநர் உரை உள்ளதாக சிவசங்கர் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
