52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்: பின்னணியில் நடந்த டிவிஸ்ட் – NTA எடுத்த நடவடிக்கை..

நீட் (National Eligibility cum Entrance Test) என்பது இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான மிக முக்கியமான நுழைவுத் தேர்வாகும். இந்தத் தேர்வு MBBS, BDS மற்றும் பிற மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் தகுதியையும் அறிவுத் திறனையும் மதிப்பிடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

நாளை நீட் மறுத்தேர்வு

இப்படியான சூழ்நிலையில், நடப்பு கல்வியாண்டில் MBBS, BDS மற்றும் பிற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 03 மே 2026 அன்று நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால், வினாத்தாள் கசிந்த விவகாரத்தால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மறுத்தேர்வும் 21 ஜூன் 2026 அன்று நடைபெறும் என்று அறிவித்தது.அதன்படி, நாளை இந்தியாவில் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நீட் மறுதேர்வு நடைபெற இருக்கிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாலை 6.20 மணி வரை தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை

இந்த தேர்வை 22.70 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத இருக்கின்றனர். மாநிலம் வாரியாக எத்தனை பேர் தேர்வு எழுதவுள்ளனர் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • உத்தரப்பிரதேசம் - 3.56 லட்சம் பேர்
  • மராட்டியம் - 2.23 லட்சம் பேர்
  • ராஜஸ்தான் - 2.03 லட்சம் பேர்
  • பீகார் - 1.56 லட்சம் பேர்
  • கர்நாடகம் - 1.45 லட்சம் பேர்
  • தமிழ்நாடு - 1.42 லட்சம் பேர்

பாதுகாப்பு ஒத்திகைகள்

எந்தவித குளறுபடிகளும் ஏற்பட்டு விடாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த முறை மறுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தேர்வின் போது வினாத்தாள் டெலிகராம் செயலியில் கசிந்தது என்பதால், இம்முறை டெலிகராம் செயலியும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இன்றைய தினம் பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டது.

நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில்

இப்படியான சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த மராட்டிய மாணவர் அப்துல்லா முஹம்மது தாலிப் என்பவரின் ஹால் டிக்கெட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட இந்த குளறுபடியால் மாணவரும் அவருடைய பெற்றோரும் செய்வதறியாது திகைத்து போயினர். தொடர்ந்து மாணவரும், பெற்றோரும் தேசிய தேர்வு முகமையிடம் புகார் அளிக்க, மாணவருக்கு நாக்பூரிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.

கடைசியில் நடந்த டிவிஸ்ட்

இந்நிலையில், அபுதாபி தேர்வு மையத்தை . மேலும், ஜூன் 19 ஆம் தேதி மாலையிலேயே தேர்வரின் தந்தையுடன் பேசினோம். தேர்வரின் பதிவு செய்யப்பட்ட லாக்இன் மூலமாகவே நகரம் மாற்றம் செய்யப்பட்டது. தேர்வு நடைபெறும் 48 மணி நேரம் முன்பு மையத்தை மாற்றுமாறு கோரிக்கை வந்தது. இதையடுத்தே, நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வு மையத்தை அபுதாபிக்கு மாற்றி PREVIEW பார்த்த நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *