எளிய முறையில் வந்த பெற்றோர்
வழக்கமாக முதலமைச்சரின் பிறந்தநாள் என்றால் அவரது இல்லத்திலோ அல்லது கட்சி அலுவலகத்திலோ தான் குடும்பத்தினர் வாழ்த்துவது வழக்கம். ஆனால், இன்று முதல்வர் விஜய் தனது வழக்கமான அரசுப் பணிகளுக்காகக் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தார். எளிய முறையில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரும், அவரது மனைவி ஷோபாவும் கோட்டைக்குள் நுழைந்தனர். முதலமைச்சரின் அறைக்குச் சென்ற அவர்கள், தங்களின் மகனுக்கு ஒரு பெரிய சிவப்பு ரோஜா மலர்க்கொத்தைக் கொடுத்து, நெற்றியில் திலகமிட்டு தங்களது ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொண்டனர்.சினிமாவில் ஆரம்ப காலத்தில் தன் மகனை செதுக்கிய ஒரு தந்தையாகவும், தாயாகவும், இன்று மாநிலத்தின் முதல் குடிமகனாக உயர்ந்திருக்கும் மகனை அரசு அலுவலகத்தில் சந்தித்து அவர்கள் வாழ்த்திய விதம், அங்கிருந்த அதிகாரிகள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டமன்றத்தில் எதிரொலித்த வாழ்த்துகள்: கட்சிப் பாகுபாடின்றி பாராட்டு
இன்று தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அவைத் தலைவர் மற்றும் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் விஜய்க்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.சபையில் எழுந்த வாழ்த்து மழைகளுக்குப் பதிலளித்த முதல்வர் விஜய், மிகவும் பணிவுடன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மக்களின் நலனுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கப் போவதாக அவர் சட்டமன்றத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் தாராளாமாகப் பாய்ந்த நலத்திட்டங்கள்
முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கட்சியினரும், ரசிகர்களும் ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர்.
குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 6 குழந்தைகளுக்குத் தமிழக அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சென்று தங்க மோதிரங்களை அணிவித்து, அவர்களின் பெற்றோருக்கு வாழ்த்து கூறினார்.தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ரத்த தான முகாம்கள், ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பிரம்மாண்ட அன்னதான நிகழ்வுகள் இன்று காலை முதலே தொய்வின்றி நடந்து வருகின்றன.

