52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
சட்டசபையில் விஜய் செய்த சைகை: உங்களுக்கும் வி. எஸ் பாபுவுக்கும் என்ன வித்தியாசம்? சிவசங்கர் சரமாரி கேள்வி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல்வர் விஜயின் சட்டப்பேரவை பேச்சை கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் பதவியின் பொறுப்புக்கு ஏற்ற வகையில் செயல்படாமல், இன்னும் தேர்தல் பிரசார மனநிலையிலும் நடிகர் பாணியிலும் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்முறை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், திமுகவை விமர்சிப்பதிலும் குட்டிக்கதைகள் கூறுவதிலும் முதல்வர் கவனம் செலுத்தியதாக சிவசங்கர் தெரிவித்தார். மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டிய நிலையில், அவற்றை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

சட்டசபை இறுதி நாள்

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்காக இன்று கூடியது சட்டப்பேரவை. பேரவையின் கடைசி நாளான இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது பல்வேறு விஷயங்களை பேசிய விஜய் பேரவையில் ‘party fund’ குறித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

சிவசங்கர் பேட்டி

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில்,“ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய் ஒரு முதலமைச்சர் பொறுப்பிற்கான தகுதியுடன் நடந்து கொள்ளவில்லை. நேற்று எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சர் தேர்தல் mode இல் இருந்து இன்னும் CM Mode-க்கு மாறாமல் இருக்கிறார். சட்டமன்றத்தை ஷூட்டிங் போல நினைக்கிறார்” என பேசினார்.சட்டம் ஒழுங்கு பிரச்சினைதொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் மீதான வன்முறை, சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் ஆகியவை குறித்து இதுவரை திமுக போராட்டங்களை முன்னெடுக்கவில்லை, ஆனால் பொது மக்கள் போராடி வருகிறார்கள். இவை எவற்றிற்கும் பதிலளிக்கவில்லை” என கூறியுள்ளார்.

குட்டிக்கதை மீது விமர்சனம்

“தொடர்ந்து பேசிய அவர், திசை திருப்புவதற்காக திமுக மீது தாக்குதல் நடத்தவும் குட்டிக்கதை சொல்கிறார். முதலமைச்சராக நடந்து கொள்ளும் நடைமுறைகளை விட்டுவிட்டு இன்னும் நடிகராகவே தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்பது வருத்தத்திற்கு உரியது. நாங்கள் காத்திருக்கிறோம், ஆனால் பொதுமக்களோ, விவசாயிகளோ காத்திருக்க தயாராக இல்லை, சிபிஎம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது, இதை திமுக தூண்டிவிட்டதா. இசை நிகழ்ச்சி நடைபெறும் போது குட்டிக்கதை சொல்வது போல இன்றும் குட்டிக்கதை சொல்கிறார்’பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்னார், மகன் என்றால் மு. க ஸ்டாலின் போல இருக்க வேண்டும் என்று, எங்களுக்கு அறிவுரை கூறும் வேலையை முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள், அடுத்தவரை குறை சொல்வதை பின்பு பார்க்கலாம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டிய பிரச்சனை அல்ல. இன்று உடல்நிலை சரியில்லை என்றால் இன்று தான் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

  • பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தை ஆளானால் அது இன்று தான் விசாரிக்க வேண்டும்.
  • திரைப்படத்திற்கு கருப்பு பணத்தில் சம்பளம் வாங்கியதாக முதலமைச்சர் மீது புகார் உள்ளது.
  • உங்கள் போக்கை நீங்கள் திருத்திக் கொள்ள வேண்டும், உங்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் உங்கள் சினிமா பாடலை போட்டு டான்ஸ் ஆடுகிறார்.
  • அவரிடம் போய் சொல்லுங்கள் நேற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது மூன்று அமைச்சர்கள் குறிக்கீடு செய்தனர். ஆனால் இன்று முதலமைச்சர் பேசும்போது குறுக்கீடு செய்ய வேண்டாம் என்று சபாநாயகர் சொல்கிறார்.
  • இந்திரா காந்தி தெரியுமா உங்களுக்கு, அவர் கொண்டு வந்த மிசா சட்டத்தை பத்தி தெரியுமா, அதை எதிர்த்து எங்கள் தலைவர் எத்தனை நாட்கள் சிறையில் இருந்தார் என்று தெரியுமா. எல்லா அரசியலையும் ஒடுக்கு முறைகளையும் பார்த்த இயக்கம் திமுக. எங்கள் வரலாற்றை காங்கிரஸ் இடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.

திமுக தந்த ஆதரவுதான்

  • திமுக உடைய ஆதரவு வாக்குகளில் வெற்றி பெற்றவர்களின் தோளில் தான் நீங்கள் ஆட்சி நடத்துகிறீர்கள்.
  • உங்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரே என் வெற்றிக்கு பாடுபட்ட திமுக தலைவருக்கு நன்றி என தெரிவித்தார்.
  • பார்ட்டி பண்ட் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா, வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்.
  • சட்டமன்றத்தில் பேசி ஒளிபரப்பு விட்டு, ரீல்ஸ் போட்டு தங்களுக்கு வாக்களித்தவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக தான் செய்கின்றீர்கள்.
  • உங்களுக்கும், வி. எஸ் பாபுவுக்கும் என்ன வித்தியாசம். வி. எஸ் பாபு கேட்டகிரி தான நீங்களும். மற்றவர்கள் கேலி செய்வதே கிண்டல் செய்வதை உடல் மொழியில் தெரிவிப்பதை திரைப்பட நடிகராக இருக்கும் போது பேசியதை முதலமைச்சராக செய்வது சரியல்ல.
  • லஞ்ச லாவண்யமாக போன பணத்தை கஜானாவில் நிரப்புகின்றோம் என்று சொல்வது சினிமா வசனம் அப்பா குறித்து முதலமைச்சர் குட்டி கதை சொல்கிறார்அப்பாவிடம் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்று உங்கள் அப்பாவே பேட்டி கொடுத்துள்ளார்.
  • என் மகன் என் கட்டுப்பாட்டில் இல்லை புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று முதலமைச்சர் அப்பா கூறினார்.
  • காருக்கு முதலமைச்சர் வரி கட்டியது தொடர்பாக வழக்கு உள்ளது திரைத்துறையில் முதலமைச்சர் பணத்தை வெள்ளையாக வாங்கினாரா ?
  • அல்லு அர்ஜூன் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கு போட்டது போல கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டு இருந்தால் கேரியர் உச்சம் எல்லாம் கழன்று இருக்கும் திமுக ஆட்சியில் முதலமைச்சர் கருணையோடு இருந்ததால்தான் நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *