52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
சிங்கப்பெண் அதிரடிப்படை ஹெல்ப்லைன் நம்பர் என்ன? தொடர்பு கொள்வது எப்படி?

பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏதேனும் தொந்தரவு, வன்முறை, குடும்ப வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், மிரட்டல் போன்ற எந்தவொரு உடனடி காவல் உதவி தேவைப்படும் சூழ்நிலைகளை எதிர்க்கொள்ளும் போது பொதுமக்கள் தயக்கமின்றி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் 1091 என்ற கட்டணமில்லா பிரத்யேக உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த மையம் 24 மணி நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் செயல்பாட்டில் இருக்கும். தற்போது, அவசர காலங்களில் எப்படி தொடர்புக் கொள்வது? என்பது குறித்து பார்ப்போம்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்றால் என்ன?

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக காவல் உதவி வழங்குவதற்காகவும், பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியை வலுப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல் படை தான் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (Singappen Special Force SSF).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *