52/25 Veerappa Ayyanar Kovil Street,Allinagaram-Theni,theni District,TamilNadu,India
Follow Us On Social Media
Subscribe Now
IND vs ENG T20 – வயது பிரச்சினை: சூர்யவன்ஷிக்கு தடை விதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் விளையாடி முடித்துவிட்டு, ஜூலை 1ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி விளையாடும்.சூர்யவன்ஷிக்கு தடை: இந்நிலையில், 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய வீரர்களுடன் ஒன்றாக தங்க கூடாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய விதிமுறைப்படி, 16 வயதுக்கு உட்பட்ட வீரர்கள், சீனியர் வீரர்களுடன் ஒன்றாக தங்க கூடாது.16 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் என்றால், அவர்கள் பெற்றோர்களுடன் மட்டுமே தங்க முடியும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளின்போது, சூர்யவன்ஷி அவருடைய பெற்றோர்களுடன் மட்டுமே தங்க முடியும். இதுகுறிதுத, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பிசிசிஐயிடம் முறைப்படி தெரிவித்துவிட்ட நிலையில், இங்கிலாந்து தொடரின்போது, சூர்யவன்ஷி, அவரது பெற்றோருடன் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரலாறு படைக்கப் போகும் சூர்யவன்ஷி: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில், சூர்யவன்ஷி விளையாடினால், இந்திய அணிக்காக மிகவும் இளம் வயதில் விளையாடிய வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைப்பார். சூர்யவன்ஷிக்கு தற்போது 15 வயதுதான் ஆகிறது. இதற்குமுன், சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகியிருந்தார். 1989ஆம் ஆண்டில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம், இந்த சாதனையை படைத்திருந்தார்.தற்போது, சூர்யவன்ஷி டி20 பார்மெட்டில், இந்திய அணிக்காக இளம் வயதில் விளையாடிய வீரராக சாதனை படைக்க உள்ளார். சூர்யவன்ஷி, டி20 பார்மெட்டில் மிக விரைவாக இந்திய அணிக்கு அறிமுகம் ஆனாலும், டெஸ்ட் பார்மெட்டில் விளையாட, இன்னமும் அதிக காலம் எடுக்கும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, அவர், தனது 21 வயதுக்கு பிறகுதான் டெஸ்ட் பார்மெட்டில் விளையாட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.வரலாற்று சாதனை: வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரில், இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக 11 பநில் 50 ரன்களை குவித்து வரலாற்று சாதனையை படைத்தார். இப்போட்டியில், 29 பந்துகளில் 94 ரன்களை குவித்து, மேட்ச் வின்னராக இருந்தார்.ஐபிஎல் 2026 சீசனில், 16 போட்டிகளில் 72 சிக்ஸர்களை விளாசி, ஐபிஎல் வரலாற்றில், ஒரு சீசனில், அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார். மேலும், 237.30 ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்களை குவித்து, ஆரஞ்சு தொப்பியையும் வென்றார்.பிளே ஆப் சுற்றில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்தில் 97 ரன்களையும், குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 47 பந்தில் 96 ரன்களையும் குவித்து அசத்தினார். இப்படி, இரண்டு நாக்அவுட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டதை தொடர்ந்து, ஏ அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியிலும் 29 பந்தில் 94 ரன்களை சேர்த்து அசத்தினார்.இப்படி, அழுத்தங்கள் நிறைந்த நாக்அவுட் போட்டிகளில் ரன் மழை பொழிந்திருப்பதால், அயர்லாந்து தொடரில் சூர்யவன்ஷி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *